வாட்ஸ் அப்பில் வந்த பெண் அதிகாரியின் ஆபாச படம் -அம்பதாயிரம் ரூபாய்க்கு நடந்த அநியாயம்

 
watsap


ஒரு பெண் அதிகாரியின் போட்டோவை ஆபாசமாக மார்பிங் செய்து பணம் கேட்ட மாணவரை போலீஸ் கைது செய்தது 

Young Men Using Smart Phone Social Media Concept  whatsapp stock pictures, royalty-free photos & images
தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த 19 வயதான மனோஜ்குமார்,  என்பவர், சென்னையில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்,ஆடம்பரமாக வாழ நினைப்பவர் .அதனால் இவருக்கு வீட்டில் கொடுக்கும் பணம் ஆடம்பர   வாழ்வுக்கு போதவில்லை .அதனால்  கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் வல்லவரான அவர் அதை வைத்து பணம் ஈட்ட நினைத்தார்  . அவரின் திட்டப்படி வேளாண்மை துறையில் பணியாற்றும் 25 வயது பெண் அதிகாரியின், 'இ - மெயில்' ஐ.டி.,யை 'ஹேக்' செய்து, அதில் உள்ள அவரின் படங்களை எடுத்து ஆபாசமாக, 'மார்பிங்' செய்துள்ளார்.

பின்னர் அந்த மார்பிங் போட்டோக்களை அவருக்கு அனுப்பி ,அவற்றை சமூக வலைதளத்தில் வெளியிட போவதாக மிரட்டி, 50 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார்.ஆனால் அவரின் மிரட்டலுக்கு பணியாத அந்த பெண்  பணம் கொடுக்க மறுத்தார் .அதன் பின்னர் அந்த மனோஜ் அந்த  பெண் அதிகாரியின் மார்பிங் படத்தை 'வாட்ஸ் ஆப்'பில் வெளியிட்டுள்ளார் .. அதனால் அந்த பெண் அதிகாரி அங்குள்ள போலீசில் அந்த மனோஜ் மீது புகார் கொடுத்தார் .அவரின் புகார்படி, புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசார், நேற்று மனோஜ்குமாரை கைது செய்து, அவரிடமிருந்து இரண்டு மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.