திருப்பதி: வீட்டு வேலைக்கு வர மறுத்த தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மொட்டை போட்டு தாக்கி அவமானப்படுத்திய பெண் உட்பட 6 பேர் கைது!

திருப்பதி: வீட்டு வேலைக்கு வர மறுத்த தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மொட்டை போட்டு தாக்கி அவமானப்படுத்திய பெண் உட்பட 6 பேர் கைது!

ஆந்திராவில் உள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டம் பலாசாவை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 20 வயது இளைஞர் ஸ்ரீகாந்த் குடும்ப வறுமை காரணமாக சொந்த ஊரில் இருந்து விசாகப்பட்டினம் மாவட்டம் பெண்டுர்த்தி மண்டலம் கிரிபிரசாத் நகருக்கு வந்து வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார்.
வயிற்றுப் பிழைப்புக்காக தெலுங்கு பிக்பாஸ் 2 புகழ் நூதன் நாயுடு என்பவர் வீட்டில் வேலைக்கு சேர்ந்தார். ஒரு மாதம் வீட்டு வேலை செய்த ஸ்ரீகாந்த் சம்பளம் வாங்கிக்கொண்டு வேலைக்கு வரவில்லை.

திருப்பதி: வீட்டு வேலைக்கு வர மறுத்த தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மொட்டை போட்டு தாக்கி அவமானப்படுத்திய பெண் உட்பட 6 பேர் கைது!

இந்த நிலையில் நூதன் நாயுடு மனைவி மதுப்பிரியா வேலைக்காரர் ஒருவரை அனுப்பி வீட்டில் இருந்த செல்போனை காணவில்லை. எனவே அதுபற்றி விசாரிக்க வேண்டும் என்று கூறி ஸ்ரீகாந்த்தை வீட்டுக்கு வரவழைத்தார்.
அப்போது ஸ்ரீகாந்த், மதுப்பிரியா ஆகியோருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் செல்போனை காணவில்லை என்றால் காவல் நிலையம் சென்று புகார் செய்யுங்கள் என்று கூறி ஸ்ரீகாந்த் ம் அங்கிருந்து சென்று விட்டார். மீண்டும் வேலைக்காரர் ஒருவரை அனுப்பி ஸ்ரீகாந்தை வரவழைத்தார் மதுப்ரியா.
ஸ்ரீகாந்த் வீட்டுக்கு வந்தவுடன் நாவிதர் ஒருவரை வரவழைத்து ஸ்ரீகாந்தை மிரட்டி அடித்து துன்புறுத்தி உட்கார வைத்து அவருக்கு மதுப்பிரியா மொட்டை போட வைத்தார்.

திருப்பதி: வீட்டு வேலைக்கு வர மறுத்த தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மொட்டை போட்டு தாக்கி அவமானப்படுத்திய பெண் உட்பட 6 பேர் கைது!

மேலும் ஸ்ரீகாந்த் மீது மது பிரியாவின் வேலையாட்கள் கம்பு, இரும்பு பைப் போன்ற ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும் இதுபற்றி வெளியில் கூறினால் கொலை செய்து விடுவோம் என்று கூறி அவரை அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் அங்கிருந்து வந்த ஸ்ரீகாந்த் நடந்த விஷயங்களை புகாராக எழுதி பெண்டுர்தி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்
ஸ்ரீகாந்த் அளித்த புகாரின் பேரில் பெண்டுர்த்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுப்ரியா மற்றும் அவருக்கு இந்த விஷயத்தில் ஒத்துழைத்த வீட்டு வேலையாட்கள் ஆகியோர் உட்பட 6 பேர் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.