"ஏண்டா ஜெயில்ல போன் பேசுறே ?"-விரட்டிய போலீசால் ஒரு கைதி என்ன செஞ்சார் தெரியுமா ?

 
arrest

திஹார் சிறையில்  போலீசை கண்டதும் மொபைல் போனை   விழுங்கிய கைதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

2,327 Cell Phone Prison Stock Photos, Pictures & Royalty-Free Images -  iStock
டில்லியில் உள்ள திஹார் சிறையில் ஆயிரக்கணக்கான விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.அங்கு பல கைதிகளுக்கு முறைகேடான முறையில் செல்போன் புழக்கத்தில் இருந்து வந்துள்ளது ,இது பற்றி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது .அதன் பேரில் போலீசார் ரகசியமாக கைதிகளை கண்காணித்து வந்தனர் 
அப்போது  விசாரணை கைதி ஒருவரிடம் 'மொபைல் போன்' இருப்பதாக சிறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.அதனால் அவர் இருந்த அறையில் சோதனை நடத்த சிறை காவலர்கள் சென்றனர். அவர்களை பார்த்து அச்சம் அடைந்த அந்த கைதி மொபைல் போனை விழுங்கினார்.அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறை பாதுகாவலர்கள் உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை நடைபெற்றது .இப்போது அவர் நலமுடன் இருப்பதாகவும், அவரது வயிற்றில் இருக்கும் மொபைல் போனை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.