"இருபது வயசு பெண்ணிடம் வம்பு செஞ்ச எழுபது வயசு தாத்தா" -அடுத்து அவருக்கு நேர்ந்த கதி .

 
murder

மகளை கிண்டல் செய்த  முதியவரை தந்தை அடித்துக்கொன்ற  தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.

rape

மராட்டிய மாநிலம் மும்பையில் சப்அர்பன் முல்தண்ட் பகுதியில் வசிக்கும் 38 வயதான சலீம் ஜாபர் அக்தர் ஆலம் என்பவருக்கு ஒரு டீனேஜ் மகள் உள்ளார். அந்த சலீமின் வீட்டில் 70வயதான அப்துல் கலில் ஷேக் என்ற முதியவர் சமையல்காரராக வேலை செய்து வந்தார்.அந்த அப்துல் என்ற சமையல்காரர் அந்த வீட்டிலிருக்கும் சலீமின் மகளை எப்போதும் கிண்டலும் கேலியும் செய்வார் .
இதனால் அந்த பெண் இது பற்றி அவரின் தந்தையிடம் கூறியுள்ளார் .அதனால் அந்த தந்தை ஒருநாள் அந்த வீட்டில் அந்த அப்துல், தன் மகளை கிண்டல் செய்வதை நேரிலேயே பார்த்து விட்டார் .இதனால் கோபமான அந்த சலீம் அந்த அப்துலை அடித்து உதைத்ததில் அவர் ரத்த வெள்ளத்தில் இறந்து விட்டார் .உடனே அவரின் இறந்த உடலை அந்த சலீம் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு மின்கம்பத்தில் அருகே வீசிவிட்டு சென்றார் .பின்னர் அந்த ஊர் மக்கள் அதை பார்த்து அருகில் உள்ள போலீசில் புகார் கூறினர் .போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ,இறந்தவரின் உடலை கைப்பற்றி விசாரித்தனர் .அப்போது சலீம் கொலை செய்ததை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர் .