"நானூறு பேர் கெடுத்ததால் நாலு மாசம் கர்ப்பமாயிட்டேனே" -கணவனை பிரிந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

 
widow rape by neigbour


கணவனை பிரிந்த பெண்ணை நானூறுக்கும் மேற்பட்டவர்கள்  பலாத்காரம் செய்த  கொடுமை நடந்துள்ளது 

Maharashtra: Motherless minor girl married off by father, raped by 400 people including cop over 6 months [Representative image]
மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் 16 வயதான மைனர் பெண் தனது தந்தை மற்றும் தாயுடன் வசித்து வந்தார் . 
இந்நிலையில் அந்த மைனர் பெண்ணின் தாய்  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார், அதைத் தொடர்ந்து அவரது தந்தை அந்த பெண்ணை  ஒரு வாலிபருக்கு திருமணம் செய்து வைத்தார் . அவரின் திருமணதிற்கு பிறகு அந்த பெண்னின் மாமியார் அவரைத் துன்புறுத்தியதால், அந்த பெண் தன்னுடைய மாமியார் வீட்டினை விட்டு வெளியேறினார் . சில நாட்களுக்குப் பிறகு, அவர்  வேலை தேடி அம்பேஜோகை நகருக்குச் சென்றார் .

அதன் பிறகு அந்த அம்பேஜோகை நகரில் , அந்த பெண்ணுக்கு வேலை கொடுப்பதாக கூறி சிலர் அவரை ஏமாற்றி கூட்டி சென்று பலாத்காரம் செய்தனர் . அதன்பிறகு, அவர் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட நூற்றுக்கணக்கான நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் . ஆக மொத்தத்தில், அவர்நானூறுக்கும் மேற்பட்ட  வெவ்வேறு நபர்களால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானார்.இதன் காரணமாக அவர் கர்ப்பமாகிவிட்டார்.அதன் பிறகு அந்த பெண் அங்குள்ள போலீசில் புகார் தந்தார் .போலீசார் வழக்கு பதிந்து இப்போது நான்கு பேரை மட்டும் கைது செய்தனர் .மற்றவர்கள் பற்றி விசாரித்து வருகின்றனர் .