"நிர்வாணமா நிக்கலேன்னா நிம்மதியில்லாம செஞ்சிடுவேன்" -வாலிபரால் பல பெண்களுக்கு நேர்ந்த கதி

 
social media

 
பல பெண்களை நிர்வாணமாக வீடியோ கால் மூலம் வர சொல்லி மிரட்டிய வாலிபரை போலீஸ் கைது செய்தது 

Man harasses woman through WhatsApp calls in Hyderabad
ஐதராபாத்தில் 25 வயது இளைஞர் ஒருவர் தன்னை சி ஐ டி ஆபீசர் என்று பொய் சொல்லி சமூக ஊடகத்தில் பல பெண்களுடன் நட்பாக பழகி வந்தார் .பின்னர் அவர்களை  நிர்வாணமாக வீடியோ கால் மூலம் வர சொல்லி மிரட்டுவார் .அப்படி மறுக்கும் பெண்களை அவர்களின் போட்டோக்களை ஆபாசமாக மார்பிங் செய்து சமூக ஊடகத்தில் வெளியிட்டு அவர்களை நிம்மதியில்லாமல் செய்து விட்டார் .
இதற்கு பயந்த சில பெண்கள் அவருக்கு அடிபணிந்து ,இதை வெளியே சொல்லாமல் இருந்துள்ளனர் .ஆனால் அந்த ஊரை சேர்ந்த ஒரு இளம் பெண்ணிடம் அந்த நபர் இப்படி நிர்வாண வீடியோ காலில் வர சொல்லியும் ,அவரின் போட்டோக்களை மார்பிங்  செய்து விடுவதாக மிரட்டியும் உள்ளார் .இதனால் அந்த பெண் அவரின் போன் நம்பரை ப்ளாக் செய்து விட்டார் .ஆனால் அந்த நபர் வேறு பல போன் நம்பரிலிருந்து அந்த பெண்ணுக்கு தொடர்ந்து போன் செய்து டார்ச்சர் செய்தார் .இதனால் பயந்த அந்த பெண் அந்த நபர் மீது போலீசில் புகார் கொடுத்தார் .போலீசார்  சைபர் க்ரைம் போலீஸ் உதவியுடன் அந்த நபரை நவம்பர் 15ஆம் தேதி பிடித்தனர் .பின்னர் அவரை விசாரித்த போது  அவர்  ஆபாச படங்களுக்கு அடிமையானவர் என்றும் அதனால் இப்படி பல பெண்களை  டார்ச்சர் செய்துள்ளதாகவும் கூறினார் .பின்னர் போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர் .