"வாலிபரை மரத்தில் கட்டி ,சேலை கட்டி,உடலுறுப்பை வெட்டி.." -அப்படி என்னதான் அந்த வாலிபர் செஞ்சார் ?

 
murder


 
காதலியுடன் பேசியதால் கோபமுற்ற பெண்ணின் குடும்பத்தினர் அந்த இளைஞனை மரத்தில் கட்டி வைத்து அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

murder

குஜராத் மாநிலம் வதோரதா மாவட்டம் பட்ரா தாலுகா சோகாரி கிராமத்தை சேர்ந்தவர் 20 வயதான  ஜெய்ஷ் ராவல். அந்த  ஜெய்ஷ் ராவலும் அதே கிராமத்தை சேர்ந்த ஆர்த்தி என்ற இளம் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.ஆனால் இவர்களின் காதலுக்கு அந்த ஆர்த்தியின் குடும்பத்தினர் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர் .இதனால் அந்த காதலனிடம் தங்களின் மகளை காதலிக்கவேண்டாமென்று அவரின் பெற்றோர் கூறினர் .ஆனால் அதை கேட்காமல் அந்த வாலிபர் அந்த பெண்ணை தொடர்ந்து காதலித்து வந்துள்ளார் .இதனால் கோபமான அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் சில உறவினர்கள் நண்பர்கள் சேர்ந்து கொண்டு அந்த வாலிபரை பிடித்து அங்குள்ள ஒரு மரத்தில் கட்டி வைத்தனர் .பிறகு அவருக்கு சேலை கட்டி பெண் வேடமிட்டு அவரை பல ஆயுதங்களால் வெட்டினர் .மரத்தில் கட்டப்பட்டு படுகாயங்களுடன் மயக்கநிலையில் இருந்த ராவலை அவரின் உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ராவலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.பின்னர் அதை சிலர் வீடியோவாக எடுத்து சமூக ஊடகத்தில் வெளியிட்டனர் .இதைபற்றி தகவலறிந்த  போலீசார் அந்த நபர்கள் மீது வழக்கு பதிந்தனர் .பின்னர் அவர்களை பற்றி விசாரித்து அந்த கும்பலை கைது செய்தனர் .