"என்பது வயசான எனக்கு ஒரு பொண்ணு வேணும்" -விளம்பரம் கொடுத்த தந்தைக்கு மகனால் நேர்ந்த கதி

 
marriage


ஒரு என்பது வயசு தாத்தா கல்யாணத்திற்கு பெண் தேடியதால் கோவப்பட்ட அவரின் மகன் அவரை கொலை செய்தார் 

Pune: Man kills 80-year-old father for wanting to remarry; arrested
மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ராஜ்குருநகர், தாலில் வசிக்கும்  சேகர் போர்ஹாடே என்ற 47 வயதான நபர் தன்னுடைய 80 வயசான தந்தையுடன் வசித்து வந்தார் .அந்த சேகருக்கு கல்யாணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர் .இந்நிலையில் அந்த சேகரின் தந்தை மனைவியில்லாமல் தனியாக இருந்ததால் அவரை அவரின் மகன் மற்றும் மருமகள் சரியாக கவனிக்கவில்லை .
இதனால் நிறைய சொத்துக்கள் வைத்திருந்த அந்த என்பது வயது முதியவர் மனம் தளராமல் தன்னை கவனித்து கொள்ள ஒரு பெண் வேண்டும் என்று திருமண வெப்சைட்டில் விளம்பரம் கொடுத்தார் .அந்த விளம்பரத்தினை  பார்த்து அவருக்கு நிறைய போன் கால் வந்தது .இதை கேட்டு கடுப்பான அவரின் மகன் தன் தந்தையிடம் சென்று, "இந்த வயசில் உங்களுக்கு பெண் வேண்டுமா?" என்று கேட்டு தகராறு செய்தார் .மேலும் இப்படி விளம்பரம் கொடுத்ததால், வேறு ஒரு பெண் அவருக்கு மனைவியாக வந்து விட்டால் சொத்துக்களை அந்த பெண்ணுக்கு கொடுத்து விடுவாரோ என்று பயந்தார் .அதனால் தன் தந்தையை கத்தியால் வெட்டியும் ,அங்குள்ள ஒரு கல்லை எடுத்து அவரின் தலையில் போட்டும் கொலை செய்தார் .பிறகுஅவரே  போலீசில் சரணடைந்ததும் அவரை கைது செய்து சிறை வைத்தனர்.