“நானும் ரெடி ,ரூமும் ரெடி ,நீங்க ரெடியா” -வேலைக்காரியால் எஜமானிக்கு வந்த போன்கால்கள்

 

“நானும் ரெடி ,ரூமும் ரெடி ,நீங்க ரெடியா” -வேலைக்காரியால் எஜமானிக்கு வந்த போன்கால்கள்

ஒரு வீட்டிலிருந்து வேலையை விட்டு துரத்தப்பட்ட ஒரு பெண் அவரின் எஜமானியை பழி வாங்க அவரின் போன் நம்பரை ஆபாச தளத்தில் வெளியிட்ட விவகாரம் பலருக்கு அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது .

டெல்லியில் மால்வியா நகரின் சிராக் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒரு பெண்ணை வேலைக்கு வைத்தார்கள் .ஆரம்பத்தில் அந்த வீட்டில் ஒழுங்காக வேலை செய்து வந்த அந்த பெண் ஒரு நாள் அவர்கள் வீட்டில் நகையை திருடி விட்டார் .இதனால் அந்த வீட்டு எஜமானி அந்த பெண்ணை பிடித்து நகைகளை கைப்பற்றிவிட்டு வேலையை விட்டு நிறுத்தி விட்டார் .
இதனால் கோபமுற்ற அந்த வேலைக்கார பெண் அவரின் நண்பர் சூரஜ் மூலம் அந்த எஜமானியம்மாவினை பழி வாங்க துடித்தார் .அதன்படி அந்த எஜமானியின் போன் நம்பரை ஒரு விபச்சார வெப்சைட்டில் வெளியிட்டு விட்டார் .மேலும் அவரின் மாமியாரின் போன் நம்பரையும் அப்படி வெளியிட்டுள்ளார் .இதனால் அந்த பெண்ணுக்கும் அவரின் மாமியாருக்கும் எந்நரமும் விபச்சாரத்துக்கு கூப்பிட்டு பல ஆண்கள் போன் செய்துள்ளார்கள் ,இதனால் கடும் கோபமடைந்த அந்த பெண் இது பற்றி அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் தந்தார் .அப்போது இந்த வழக்கை ஸைபர் க்ரைம் போலீசார் விசாரித்த போது இந்த வேலையை செய்தது அந்த பகுதியில் வசிக்கும் சூரஜ் என்பவர் என்பதை கண்டறிந்தார்கள் .பிறகு சூரஜை பிடித்து விசாரணை நடத்தியபோது தன்னை இப்படி அவர்களின் போன் நம்பரை ஆபாச தளத்தில் வெளியிட சொன்னது அந்த வீட்டிலிருந்து வேலையை விட்டு துரத்தப்பட்ட வேலைக்கார பெண் என்ற உண்மையை கூறினார் .பிறகு போலீசார் அந்த வேலைக்கார பெண்ணையும் பிடித்து விசாரித்து வருகிறார்கள் .

“நானும் ரெடி ,ரூமும் ரெடி ,நீங்க ரெடியா” -வேலைக்காரியால் எஜமானிக்கு வந்த போன்கால்கள்