"பொண்ணை தொட்ட இடத்தையெல்லாம் புண்ணாக்குங்கடா"-காதலனுக்கு காதலியின் உறவினர்களால் நேர்ந்த கதி

 
love

  
ஒரு காதலனை காதலியின் உறவினர்கள் அடித்து கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது .

Rajasthan youth thrashed by lover's relatives
ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் உள்ள ரணசார் கிராமத்தில் வாசல் கான் என்ற 20 வயதான வாலிபர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு பணக்கார வீட்டு பெண்ணை காதலித்தார் .அதன் காரணமாக அந்த வாசல் காண் அந்த பெண்ணோடு பல இடங்களுக்கு ஜாலியாக சென்று வந்தார் ,இந்த விஷயம் அந்த   பெண்ணின் உறவினர்களுக்கு தெரிய வந்ததும் அவர்கள் அந்த வாலிபர் மீது கடும் கோபத்துகுள்ளானார்கள் .அதனால் அவர்கள் அந்த நபரிடம்  தங்களின் மகளை மறந்து  விடுமாறு அவரின் நணபர்களிடம் சொல்லி அனுப்பினர் .ஆனால் அந்த கான் அந்த பெண்ணோடு இருக்கும் காதலை  கை விட மறுத்து அவருடன் மீண்டும் பல இடங்களில் சந்தித்து பேசி வந்துள்ளார் .
இதனால் அந்த பெண்ணின் உறவினர்கள் அவரின் நண்பர்களை  வைத்தே அவரை  கொலை செய்ய  முடிவெ டுத்தனர் .அதனால் அவரின் நண்பர்கள் மூலம் அவரை ஒரு மது பார்ட்டிக்கு வர சொன்னார்கள் .அதனால் அந்த கான் தன்  நண்பர்கள் கூப்பிட்ட அந்த பார்ட்டிக்கு கடந்த வாரம் சென்றார் .அப்போது அந்த நண்பர்களும் வந்த காதலியின் உறவினர்களும்  சேர்ந்து கொண்டு அந்த கானை  அதி பயங்கர ஆயுதங்கள் மூலம் தாக்கினர்  .பிறகு  அவர் மயங்கி விழுந்ததும் அவர் இறந்து விட்டதாக நினைத்து  அவர்கள் சென்று விட்டனர் .பின்னர் அங்கிருந்த பொது மக்கள் அவரை  அங்குள்ள ஹாஸ்ப்பிட்டலில் சேர்த்தனர் .அங்கு இரண்டு நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அந்த கான் இறந்து  விட்டார்.பின்னர் போலீசார் கொலை  வழக்கு பதிவு செய்து அந்த கானின் நன்பர்கள் மற்றும்  உறவினர்களை கைது செய்தனர்.