காவல் நிலையத்தின் உள்ளே வைத்து வாலிபர் கழுத்தறுத்த சம்பவம்

 
murder murder

மதுராந்தகம் அருகே காவல் நிலையத்தில் உள்ளே வைத்து வாலிபரை கழுத்தறுத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

murder

செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் அடுத்துள்ள  மதூர் மற்றும் பாதிரி கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்களுக்கு 20 நாட்களுக்கு முன்பு   இருதரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டுக் கொண்டனர். இதனால் அச்சரப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து இருதரப்பினரையும் சுமார் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் கைதான பத்து நபர்களும் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்துள்ளனர். நீதிமன்ற உத்தரவுப்படி, அச்சரப்பாக்கம் காவல் நிலையத்தில் நிபந்தனை ஜாமினில்  கையெழுத்திட அச்சரப்பாக்கம் காவல் நிலையத்திற்கு வந்தனர்.


இன்று இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் அச்சரப்பாக்கம் காவல் நிலையத்தில் உள்ளே கையெழுத்து போடும் பொழுது, பாதிரி கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் கையில் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால்  எதிர்த்தரப்பினரான மதூர் கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமாரை கழுத்தில் அறுத்ததில் வினோத்குமார்  காயம் அடைந்து மயக்கம் அடைந்தார். கழுத்தில் காயமடைந்த வினோத்குமாரை காவல்துறையினர்  அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். கத்தியால் கிழித்த விஜயகுமாரை போலீசார் பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பட்டப்பகலில் அச்சரப்பாக்கம் காவல் நிலையத்தில் உள்ளே கத்தியால் கிழித்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.