மகளை மிரட்டிய அப்பாவுக்கு தூக்கு - மூன்றே மாதத்தில் நீதிமன்றம் அதிரடி

 
ம்ம்

மகளை மிரட்டி தந்தை  பாலியல் வன்கொடுமை செய்ததை பார்த்துவிட்ட தாய் அளித்த புகாரில் மூன்றே மாதங்களில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.  போக்சோ வழக்கில் காலம் தாழ்த்தாமல் மூன்று மாதங்களில் அதிரடி காட்டியிருக்கிறது பஹ்ராயிச் மாவட்ட நீதிமன்றம்.

உத்தரபிரதேசத்தில் உள்ளபஹ்ராயிச் மாவட்டத்தில் சுஜாவுலி கிராமம்.  இக்கிராமத்தில் வாழ்ந்து வந்த 40 வயதாகும் அந்த வாலிபருக்கு மனைவி மகள் உண்டு.

ப்ம்

மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் தனது 14வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் அந்த தந்தை.  இதை தாயிடம் சொல்ல பயந்துகொண்டு சொல்லாமல் இருந்திருக்கிறார்  அந்த சிறுமி.   இதை  தனக்கு சாதகமாக  பயன்படுத்திக்கொண்ட தந்தை, தொடர்ந்து மகளுக்கு தொந்தரவு கொடுத்திருக்கிறார்.

ஒருநாள் மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தபோது, வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குள் திடீரென்று நுழைந்த மனைவிக்கு அதிர்ச்சி.  சொந்த தந்தையே மகளை அப்படி செய்தது பார்த்து ஆத்திரத்தில் சத்தம்போட்டு திட்டியிருக்கிறார்.

இதன்பின்னர், மகளிடம் விசாரித்தபோது,  யாரிடமாவது சொன்னால் கொன்றுவிடுவேன் என்று அப்பா மிரட்டினார் என்று சொல்லிவிட்டு அழுதிருக்கிறார்.  

உடனே மகளை அழைத்து சென்று போலீசில் புகாரளிக்கவும் அவர்கள் போக்சோ  சட்டத்தின் கீழ் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

ஃப்க்

மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் மூன்றே மாதத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.  வழக்கை விசாரித்த நீதிபதி அந்த வாலிபருக்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருக்கிறார்.

போக்சோ வழக்கீல் விரைந்து நடவடிக்கை எடுத்த போலீசாருக்கும்,  மூன்றே மாதங்களில்  விசாரணை முடித்து தீர்ப்பளித்துள்ள நீதிபதிக்கு பாரட்டுக்கள் குவிகின்றன.