பள்ளிக்கூட பாத்ரூமுக்குள் ப்ளேடுடன் சென்ற மாணவி -அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்

 
murder

பள்ளி மாணவியை திருமண ஆசை காமித்து ,மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து தற்கொலைக்கு தூண்டிய வாலிபரை  போலீசார்  கைது செய்துள்ளனர்.

rape

தமிழகத்தின் கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி, அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவிக்கு  அதே பகுதியை சேர்ந்த 22 வயதான சரவணகுமார் என்பவருடன் காதல்  ஏற்பட்டது.

அதனால் இருவரும் தங்களின் வீடுகளுக்கு தெரியாமல் தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர் . அப்போதெல்லாம்  அந்த வாலிபர் அந்த மாணவியிடம் அவரை விரைவில் கல்யாணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார் .பின்னர் இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டி வந்துள்ளார் .அதனால் அந்த மாணவி இதை வெளியே சொல்லாமல் அவர் கூப்பிட்ட போதெல்லாம் அவரோடு சென்று வந்தார் .இதனால் அந்த மாணவி மிகவும் மன உளைச்சலில் இருந்தார் .இந்நிலையில் அந்த வாலிபர் மீண்டும் அந்த பெண்ணை ஸ்கூலுக்கு வந்து உல்லாசத்திற்கு கூப்பிட்டார் .இதனால் அந்த மாணவி பள்ளிக்கூடத்திலிருக்கும்போது ஒரு ப்ளேடை எடுத்து கொண்டு அங்குள்ள பாத்ரூமிற்குள் சென்று தனது கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்..உடனே அந்த மாணவி அலறும் சத்தம் கேட்டு அந்த பள்ளி நிர்வாகத்தினர் அந்த மாணவியை மீட்டு அருகிலுள்ள ஹாஸ்ப்பிட்டலில் சிகிச்சைக்கு சேர்த்தனர் .பின்னர் அந்த மாணவியை   தற்கொலைக்கு தூண்டிய அந்த  சரவண்குமாரை கைது செய்தனர்