"லாட்ஜுக்கு வந்த மாணவியை இப்படியா செய்வே" -ஒரு கல்லூரி மாணவரின் வெறித்தனம்

 
love


காதலிக்க மறுத்த மாணவி மீது தீ வைத்துவிட்டு தானும் தற்கொலைக்கு வாலிபர் முயன்றதால் இருவரும் உயிருக்கு போராடி வருகின்றனர் .

Youth sets girl and self on fire Andhra Pradesh [Representative image]
தெலுங்கானாவின் பூபாலபல்லைச் சேர்ந்த ஹர்ஷவர்தன் என்ற வாலிபர் அவரோடு கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியை காதலித்து வந்தார் .ஆனால் அந்த மாணவி அவரோடு நட்டவுடன் தான் பழகி வந்துள்ளார் .அதனால் அந்த ஹர்ஷவர்தன் அந்த மாணவியிடம் தன்னுடைய காதலை சொல்ல பலமுறை முயன்றார் 

அதனால் அந்த மாணவர் அந்த மாணவியை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் லாட்ஜில் சந்திக்க நவம்பர் 12ம் தேதி வர சொன்னார் .அவரின்  பேச்சை நம்பி அந்த மாணவி அங்கு சென்றார் .அப்போது  அந்த மாணவர் அவரின் காதலை அந்த பெண்ணிடம் பலமுறை கூறினார் .ஆனால் அந்த பெண் அவரின் காதலை ஏற்க மறுத்து அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார் .இதனால் கோபமடைந்த  அந்த மாணவர் திடீரென்று ஒரு பெட்ரோலை  எடுத்து அந்த பெண்ணின் மீது ஊற்றி எரிய  விட்டார் ,.பின்னர் அந்த  பெட்ரோலை  எடுத்து தன மீதும் கொட்டி  கொண்டு தற்கொலைக்கு முயன்றார் .பின்னர் அக்கம் பக்கத்தினர்  இருவ்ரும் தீயில்  எரிவதை கண்டு அவர்களை அங்குள்ள ஹாஸ்ப்பிட்டலில் சிகிச்சைக்கு தூக்கி சென்றனர்  ,அங்கு இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில்  உயிருக்கு போராடி வருகின்றனர் . பின்னர் போலீஸ்  இந்த சம்பவம்  பற்றி வழக்கு பதிந்து  விசாரித்து வருகின்றனர் .