கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பர் அடித்து கொலை! சென்னையை பரபரப்பாக்கிய சம்பவம்

 
murder

சென்னையில் கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

murder

சென்னை டிபி சத்திரம் கல்லரை தோட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் ராமசந்திரன் (45), மோகன்ராஜ் (43) மற்றும் மீனாட்சி (41). நண்பர்களான மோகன் ராஜூம், ராமச்சந்திரனும் பெயிண்டர் வேலை பார்த்து வந்துள்ளனர். மேலும் மீனாட்சி அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் மீனாட்சிக்கு திருமணமாகி தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இதே போல் மோகன்ராஜும் திருமணமாகி தனது மனைவியுடன் ஏற்பட்டு கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

பின்னர் மோகன்ராஜ்க்கும்- மீனாட்சிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் அமைந்தகரை எம்.எம்.காலனி ஏ பிளாக் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து இருவரும் கணவன், மனைவி போல் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். மேலும் நண்பர் ராமச்சந்திரன் அடிக்கடி மோகன்ராஜ் வீட்டிற்கு வந்து செல்வதும், அதுமட்டுமின்றி மூவரும் சேர்ந்து மது அருந்துவதையும் வாடிக்கையாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து கடந்த 25-ஆம் தேதி கிருஸ்துமஸ் பண்டிகையின் போது மோகன்ராஜ் தனது நண்பர் ராமச்சந்திரனுடன் மது அருந்தி விட்டு ஒன்றாக வீட்டிற்கு வந்து படுத்து தூங்கியுள்ளனர். அப்போது வேலைக்கு சென்றிருந்த மீனாட்சி வேலை முடிந்து வீட்டிற்கு வந்து மது அருந்தியாக தெரிகிறது. பின்னர் நள்ளிரவு மோகன் ராஜ் நன்றாக தூங்கி கொண்டிருந்த போது ராமச்சந்திரனும்- மீனாட்சியும் தகாத உறவில் இருந்துள்ளார். திடீரென மோகன்ராஜ் எழுந்து பார்த்த போது இருவரும் தகாத உறவில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆத்திரத்தில் மீனாட்சி மற்றும் ராமச்சந்திரனை சரமாரி தாக்கியுள்ளார். இதில் ராமச்சந்திரன் மயங்கிய நிலையில் மறுநாள் காலை வரை (26 ஆம் தேதி) ராமச்சந்திரன் எழாததால், சந்தேகமடைந்த மோகன்ராஜ் மற்றும் மீனாட்சி உடனே 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

murder

பின்னர் அங்கு வந்த ஆம்புலன்ஸ் ராமச்சந்திரனை பரிசோதித்து அவரது நாடித்துடிப்பு குறைவாக இருந்தால் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக கேஎம்சி மருத்துவமனையில் சேர்த்தனர் ‌. அங்கு மருத்துவர்கள் ராமச்சந்திரனை பரிசோதித்த போது அளவுக்கு அதிகமான மதுபோதையில் இருந்ததும் , நாடித்துடிப்பு குறைந்து மிக ஆபத்தான நிலையில் இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து மருத்துவமனை நிர்வாகம் இது குறித்து அமைந்தகரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் போலீஸார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமச்சந்திரன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் அமைந்தக்கரை போலீஸார் இது குறித்து சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து மீனாட்சி மற்றும் மோகன்ராஜை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

குறிப்பாக உயிரிழந்த ராமச்சந்திரன் உடலில் எந்த காயமோ ரத்த போக்கோ இல்லாததால் அவர் எப்படி உயிரிழந்தார்? என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி ராமச்சந்திரன் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அவர் இறப்பிற்கான உண்மையான காரணம் தெரிய வரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர் ‌.