"டபுள் மீனிங்கில் பேசிக்கிட்டே டக்குனு டச் பண்ணுவார் " -மாணவிகளிடம் பேராசிரியரின் பலான லீலைகள்

 
arrest


 மாணவிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட பேராசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

rape

தமிழகத்தின் கோவை அரசு கலைக்கல்லூரியில் பிபிஏ துறை தலைமை பேராசிரியராக பணியாற்றி வருபவர் ரகுநாதன். அந்த ரகுநாதன் அந்த கல்லூரி மாணவிகள் சிலரிடம் பாலியல் ரீதியாக பேசி, இரட்டை அர்த்தம் படத்துடன்  'சேட்' செய்வதாகவும், பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகவும், கல்லூரி முதல்வரிடம் சிலர் புகாரளித்தனர். பின்னர் கடந்த 16 ஆம் தேதி  மாணவர் அமைப்பினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் விசாரணை கமிஷன் அமைத்து அந்த பேராசிரியரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அந்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்வாகம் கூறினாலும் ,மாணவர்கள் திருப்தியடையாமல் அந்த பேராசிரியர் மீது போலீசில் புகாரளித்தனர் .
அதன் பின்னர் போலீசார் அந்த பேராசிரியர் ரகுநாதனிடம் விசாரணை மேற்கொண்டனர் .மேலும் கல்லூரி நிர்வாகமும் விசாரணை நடத்தியதில் அவரின் இந்த குற்றம்  ஊர்ஜிதமானது .அதன் பேரில் அந்த பேராசிரியர் ரகுநாதன் மீது பல பிரிவுகளில் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர் .