ஊரடங்கு காலத்தில் தந்தையே பெற்ற மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை!! தாய்ப் புகாரில் தலைமறைவானவருக்கு வலை !!

 

ஊரடங்கு காலத்தில் தந்தையே பெற்ற மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை!! தாய்ப் புகாரில் தலைமறைவானவருக்கு வலை !!

தெலுங்கானாவின் விகாராபாத் மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் 13 வயது சிறுமி தனது தந்தையால் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமி ஒரு பள்ளியில் தங்கி படித்து வந்தார். மார்ச் மாதத்தில் நாடு தழுவிய ஊரடங்கு விதிக்கப்பட்டபோது வீடு திரும்பியிருந்தார்.
இந்த சம்பவம் கரன்கோட் காவல் நிலையத்தின் எல்லைக்குள் நடந்தது. 35 வயதான குற்றம் சாட்டப்பட்டவர், தினக் கூலி. இவர் நான்கு முறை திருமணம் செய்தவர். அவரது முதல் இரண்டு திருமணங்களும் விவாகரத்தில் முடிவடைந்தன. அதே நேரத்தில் அவரது மூன்றாவது மனைவி காலமானார். பாதிக்கப்பட்ட சிறுமி மூன்றாவது மனைவிக்கு பிறந்தவர். தற்போது, அவர் தனது தாய் 4வது மனைவி, மகனுடன் வசித்து வந்தார்.

ஊரடங்கு காலத்தில் தந்தையே பெற்ற மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை!! தாய்ப் புகாரில் தலைமறைவானவருக்கு வலை !!
மைனர் சிறுமி பெற்ற தந்தையால் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேலும், குற்றம் சாட்டப்பட்ட மனிதனின் கொடூரமான குற்றம் குறித்து குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியவில்லை. மேலும் இந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டி உள்ளார்.

இருப்பினும், சில நாட்களுக்கு முன்பு, தனது மாற்றாந்தாயிடம் தனக்கு ஏற்பட்ட வேதனையை விவரித்தார். இதையடுத்து தாய் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து குற்றம் சாட்டப்பட்டவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 375 (கற்பழிப்பு) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைத் தடுக்கும் (போக்ஸோ) சட்டத்தின் பிற தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது தந்தை தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவத்தில், மத்திய பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தில் ஊரடங்கின்போது 18 வயது சிறுமி தனது தந்தையால் இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் தாய்க்கு தெரிந்தபோதும் கண்டுகொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
சிறுமியின் பெற்றோர் தங்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரித்தனர், மேலும் ஒரு பையனை காதலித்ததை தட்டிக் கேட்டதால் தங்கள் மகள் வீண் பழி சுமத்துவதாக தெரிவிதித்திருந்தனர்.