மருமகளை பலாத்காரம் செய்த மாமனார் கைது
எடப்பாடி கொங்கணாபுரம் அருகே மருமகளை கற்பழித்த மாமனார் கைது செய்யபட்டார்.
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியம் எருமைப்பட்டி ஊராட்சியிலுள்ள வெட்டுக்காடு பகுதியில் வசிக்கும் விவசாயி ராஜி (65) என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் ராஜிவின் மகன் ஜெயப்பிரகாஷ்- மருமகள் புவனேஸ்வரி ஆகிய இருவரும் அவர்களது இரண்டு குழந்தைகளுடன் திருச்செங்கோட்டில் எக்ஸ்பிரஸ் கொரியர் நடத்திக்கொண்டு அங்கேயே வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றனர்.
இதனிடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பு கணவன் மனைவியிடையே ஏற்பட்ட சண்டையால் மருமகள் புவனேஸ்வரி அவரது தாயார் வீடான சங்ககிரியில் தங்கியிருந்து விட்டு கடந்த 21ம் தேதி ரேசன் பொருள் வாங்குவதற்காக வெட்டுக்காட்டிலுள்ள மாமனார் மாமியார் உள்ள வீட்டில் இரவு தங்கியுள்ளார். அன்று நள்ளிரவில் மருமகள் உறங்கிக் கொண்டிருந்த அறைக்கு சென்ற மாமனார் ராஜி மருமகள் புவனேஸ்வரியை பாலியியல் தொந்தரவு செய்து கற்பழித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மருமகள் புவனேஸ்வரி அவளது தாய் மற்றும் கணவரிடம் நடந்ததை எடுத்துக்கூறிவிட்டு இன்று கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் தன்னை கற்பழித்த மாமனார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருமகள் கொடுத்த புகாரின் பேரில் கொங்கணாபுரம் போலீசார் மாமனார் ராஜியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். மருமகளை கற்பழித்த மாமனார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட இச்சம்பவம் கொங்கணாபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.