கரும்பு திருட வந்த நபர்களை தட்டிக் கேட்ட விவசாயி அடித்து கொலை
அரகண்டநல்லூர் அருகே நாயனூர் கிராமத்தில் சொந்த நிலத்தில் பன்னி கரும்பு திருட வந்த நபர்களை தட்டிக் கேட்டதால் விவசாயி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அடுத்த நாயனூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார் மகன் மணிகண்டன் (34) இவருக்கு மனைவி ஒரு மகன் உள்ளனர். அதே கிராமத்தில் மணிகண்டனுக்கு சொந்தமான சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் எதிர்வரும் பொங்கலுக்கு பன்னி கரும்பு வளர்த்து வருகிறார். தினமும் அதை பாதுகாப்பதற்காக வழக்கம்போல திங்கள் கிழமை இரவு 9 மணி அளவில் தனது விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்பொழுது அருகிலுள்ள வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் கரும்பை திருடியதாக தெரிகிறது.
இதை பார்த்த மணிகண்டன் யார் நீங்கள் எங்கிருந்து வந்திருக்கிறீர்கள் என்று கேட்டபோது ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் கரும்பால் மணிகண்டனை அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த பகுதி பொதுமக்கள் மணிகண்டனை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் அங்கு மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பகுதி மக்கள் திருக்கோவிலூர் விழுப்புரம் செல்லும் கூட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
மணிகண்டனை தாக்கிய மூன்று நபர்களை பிடித்து கட்டி வைத்தனர் அவர்களை அரகண்டநல்லூர் போலீசார் மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணையில் ஈடுபட்டனர் அதில் வீரபாண்டி கிராமத்தில் சேர்ந்த வினோத் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி திருக்கோவிலூர் - விழுப்புரம் பிரதான தேவனூர் கூட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பன்னி கரும்பு திட வந்த நபர்களை தட்டிக்கட்ட விவசாயி அடித்துக் கொன்ற சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.