ஒரே நாளில் 3 காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்த வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு
தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று ஒரே நாளில் வீட்டை விட்டு ஓடி வந்த 3 காதல் ஜோடிக்கு திருமணம் செய்து கட்டப்பஞ்சாயத்து செய்த வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தண்டையார்பேட்டை சேனியம்மன் கோவிர் தெரு பகுதியில் வசித்து வருபவர் கார்த்திக். இவர் வழக்கறிஞர் பயிற்சி செய்து கொண்டே கட்டப்பஞ்சாயத்து காதல் ஜோடிக்கு திருமணம் ராயபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்துவைத்து பரபரப்பான வழக்கறிஞர் போலவே காட்டி வந்தார். நேற்று ஒரே நாளில் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வெளி மாவட்டங்களில் இருந்து வீட்டை விட்டு ஓடி வந்த மூன்று பெண்களுக்கு திருமணம் செய்து வைத்து கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டார்.
இதனை அடுத்து நேற்று மின்வெட்டு ஏற்பட்டு சாலையை இருண்டு கிடந்த நேரத்தில் நேரத்தில் வீட்டின் அருகே அமர்ந்து தனி தனியாக மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்பொழுது அதே பகுதியைச் சேர்ந்த கொலை குற்றத்திற்காக ஆறு வருடம் சிறைவாசம் அனுபவித்து வெளியே வந்த ரவுடி ராமு என்பவர் கார்த்திக்கை தட்டி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்கவாதம் ஏற்பட்டு ராமு கையில் இருந்த அரிவாளால் கார்த்திக்கின் கையை வெட்டியுள்ளார். இதில் துடிதுடித்த கார்த்திக் கதறிய பொழுது, தகவல் இருந்து சம்பவ இடத்திற்கு வந்த தண்டையார்பேட்டை போலீசார் ராமுவின் உறவினரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்ல முற்பட்டனர். அவர்களின் குடும்பத்தார் கூடி நின்று கூச்சலிட்டு அனுப்ப மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அருகாமையில் இருந்த பகுதி வாசிகள் அனைவரும் போலீசாரை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பானது.
இதனால் போலீசார் ராமுவின் உறவினரை காவல் நிலையம் அழைத்துச் செல்லாமல் விட்டுவிட்டு ஆத்திரத்தோடு திரும்பினார். இதனால் தண்டையார்பேட்டை சேனி அம்மன் கோவில் தெருவில் பரபரப்பு ஏற்பட்டது.