"போகும்போது இடிக்கிறான் ,வரும்போது புடிக்கிறானே.." - மாணவிகளை டார்ச்சர் செய்த கண்டக்டரின் கதி

 
harasment

பஸ்சில் பயணிக்கும்போது மருத்துவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பஸ் கண்டக்டர் கைது செய்யப்பட்டார்.

women gang rape by five man

கர்நாடக மாநிலம் உடுப்பி  டவுனில் இருந்து தென்கனிடியூர் கிராமத்திற்கு ஒரு தனியார் டவுன் பஸ் ஓடுகிறது. அந்த பஸ்சில்  உபேந்திரா என்கிற வாலிபர் கண்டக்டராக பணியாற்றி வந்தார் .மேலும் அந்த பஸ்ஸில் தினமும் அதே பகுதியிலுள்ள மருத்துவ கல்லூரியில் படிக்கும் இளம் மாணவிகளும் ,பேராசியர்கள் மற்றும் வார்டன்கள் ஆகியோர் தினமும் பயணம் செய்து வந்தனர் .அப்போது அந்த கண்டக்டர் அந்த மாணவிகளை அந்த பஸ்ஸில் போகும்போதும் வரும்போதும் இடிப்பதும் ,பிடிப்பதுமாக இருந்தார் .அதனால் அந்த மாணவிகள் அவர் மீது மிக கோபமாக இருந்தனர் .அந்த கண்டக்டரின் செய்கையால் காண்டாகி இருந்தனர் 

இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி வழக்கம்போல் மாணவிகள் அந்த பஸ்சில் ஏறி பயணித்தனர். அப்போது அந்த கண்டக்டர் வழக்கம்போல பாலியல் சீண்டல்களை மாணவிகள் மீது செய்தார் .இதனால் அந்த கண்டக்டரை பொது மக்கள் பிடித்து அடி உதை கொடுத்தனர் .
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில் உடுப்பி கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்பேரில் கண்டக்டரை உடனடியாக கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார்  நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர்.