"செக்கப் பண்ண டாக்டரையே பிக்கப் பண்ணி .."ஒரு பெண் செஞ்ச வேலைய பாருங்க

 
doctor


ஒரு டாக்டரிடம் ஒரு பெண்ணை வைத்து மிரட்டி பணம் பறித்த நபர்களை போலீஸ் கைது செய்தது 

Charkop police bust honey trap, arrest five accused
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சார்கோப்பில் உள்ள செக்டார் 3ல் கிளினிக் வைத்திருக்கும் மருத்துவர் சுதிர் ஷெட்டி 53 வயதானவர் ஆவார் .அவரை ஒரு கூட்டம் ஒரு பெண்ணை வைத்து பாலியல் மோசடியில் சிக்க வைத்து பணம் பறிக்க திட்டமிட்டது .அதன் படி அந்த 25 வயதான பெண்ணை அந்த கூட்டம் அந்த டாக்டரிடம் சிகிச்சைக்கு செல்வது போல் அனுப்பினார்கள் .அப்போது அந்த டாக்டர் அந்த பெண்ணை அவரின் சிகிச்சை அறையில் படுக்க வைத்து செக்கப் பண்ணும்போது அதை ரகசியமாக அந்த கும்பல் வீடியோ எடுத்தது .இதற்கு அந்த பெண்ணும் உடந்தையாக இருந்தார் . அந்த டாக்டரை பல இடங்களில் செக்கப் பண்ண சொல்லி நடித்தார் .அதன் பிறகு அந்த கூட்டம் அந்த அந்த வீடியோவை காமித்து அந்த டாக்டரிடம் இதை பொலிசிலிலும் சமூக ஊடகத்திலும் விடுவதாக மிரட்டி அவரை தாக்கி  பல லட்சங்கள் பணம் கேட்டது .
இதனால் பயந்த அந்த டாக்டர் அந்த பெண்ணிடம் 2லட்சம் ரூபாய் வரை கொடுத்தார் .ஆனால் அந்த கூட்டத்தினர் அந்த டாக்டரிடம் மேலும் பணம் கேட்டு அடிக்கடி  தொல்லை கொடுத்தனர் .இதனால் பயந்து போன அந்த டாக்டர்  அந்த கூட்டத்தின் மீது  போலீசில் புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிந்து அந்த கூட்டத்தை  சேர்ந்த , அமித் மானே, தீபக் மானே மற்றும் மனோஜ் நாயுடு மற்றும் இரண்டு பெண்களை கைது செய்தனர்.