பெண்களின் கால்களை வெட்டி..கொடூர கொலுசு திருடர்கள்

 
lo

 தாலிச் செயினையோ, தங்கச்சங்கிலியையோ அபகரிக்க பெண்களின் கழுத்தையே வெட்டிய கொடூரம் நிகழ்ந்திருக்கிறது.  கம்மலுக்காக காதையே  அறுத்துச்செல்லும் கொடூரமும் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.   இந்த நிலையில் கொலுச களுக்காக கால்களையே வெட்டிவிடும் கொடூர திருடர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

 இப்படி ஒரு கொடூரமான சம்பவங்கள் வடமாநிலங்களில் அரங்கேறி வருகின்றன.   கொலுசு காலுக்காக பெண்களின் கால்களை வெட்டி எடுத்து அதன் பின்னர் கொலுசை கழற்றுக்கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் பெண்களை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு போகும் கொடூரம் நிகழ்ந்திருக்கிறது.

 ராஜஸ்தான் மாநிலத்தில் ராஜ்சமந்த் மாவட்டத்தில்  கண் வாய் கன்குபாய் என்கிற 45 வயது பெண்ணுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.  கடந்த திங்கட்கிழமை அன்று இந்த பெண் வயலில் வேலை செய்து கொண்டிருந்த தன் கணவனுக்கு சாப்பாடு கொண்டு சென்றிருக்கிறார்.   வீட்டிலிருந்து புறப்பட்டு சென்ற அப்பெண் கணவருக்கு சாப்பாடு கொண்டு போகவில்லை.  

lu

 மாலை வரை வயலில் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த கணவன்,   தன் குழந்தைகளிடம் அம்மா எங்கே ஏன் எனக்கு சாப்பாடு கொண்டு வரவில்லை என்று கேட்டிருக்கிறார்.   அதற்கு குழந்தைகள்,  அம்மா தான் சாப்பாடு கொண்டு வந்தார் என்று சொல்லியிருக்கிறார்கள்.  இதையடுத்து அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது சாப்பாடு கொண்டு போவதை நான் பார்த்தேன் என்று சொல்லியிருக்கிறார்கள்.

 இதனால் பதறிய கணவர்,  வயலுக்குச் சென்று தேடியிருக்கிறார்.  எங்கேயும் இல்லை.  இரவு முழுவதும் தேடியும் மனைவியை கண்டுபிடிக்க முடியாததால் போலீசில் சென்று புகார் அளித்திருக்கிறார்.   மறுநாள் காலையில் காட்டுப் பகுதியில் பெண்ணின் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.   இதையடுத்து போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்ற போது உடல் ஒரு பக்கமும்.    கால்கள் வெட்டப்பட்டு தனியாக ஒரு பகுதியில் கிடந்திருக்கின்றன.

 காலில் இருந்த கொலுசு திருடப்பட்டு இருந்திருக்கிறது.   மனைவி காணாமல் போனதாக புகார் கொடுத்தவரை அழைத்து வந்து பார்த்தபோது அவர் தனது மனைவி தான் என்று அடையாளம் காட்டினார்.  கொலுசுக்காக இந்த கொலை நடந்திருப்பது என்பதை போலீசார் உறுதி செய்தனர்.  

 பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்து இருப்பது தெரியவந்துள்ளது.   இதே பாணியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜெய்ப்பூர் பகுதியில் 55 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.   அவரும் இதேபோல் கால்கள் துண்டிக்கப்பட்டு கொலுசு திருடப்பட்டிருக்கிறது.   உண்மையிலேயே பணத்துக்காக இப்படி கொலுசு திருடர்கள் கிளம்பி இருக்கிறார்களா.  இல்லை ஏதேனும் ஒரு சைக்கோ திருடனா என்கிற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள்.