முதலிரவில் வெளியேறிய புதுப்பெண் -அந்த அறையை ஜன்னல் வழியாக பார்த்த கணவன் அதிர்ச்சி

 
ஃப்ஃப்

மூன்று முடிச்சு போட்ட கணவன் முதலிரவில் தன் மகன் மனைவி இப்படி ஒரு காரியத்தைச் செய்வார் என்று நினைத்துப் பார்த்திருக்கவே மாட்டார்.   முதலிரவில் தன்னிடம் பேசிப்பேசி தூங்க வைத்துவிட்டு,  பாதி இரவில் மனைவியை காணவில்லை என்று தேடியபோது அந்த அறை உட்பக்கமாக தாழிடப்பட்டிருந்துள்ளன.  ஜன்னல் வழியாக பார்த்த கணவர் பேரதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார்.

 வேலூர் மாவட்டத்தில் முத்து மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி.  இவரது மனைவி லட்சுமி .  இத்தம்பதிக்கு புவனேஸ்வரி என்கிற இருபத்தி ஒரு வயது மகள்,  இரண்டு மகன்கள் இருந்தனர்.   காட்பாடியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார் புவனேஸ்வரி.  படிப்பு முடியும் முன்னரே புவனேஸ்வரிக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்துவிட்டனர்.  

 இதை அடுத்து ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிபாகத்தை எடுத்த சுமைதாங்கியை சேர்ந்த மணிகண்டன் என்ற 28 வயது இளைஞரை நிச்சயதார்த்தம் செய்து திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.   தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மணிகண்டனுக்கும்,  கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்த புவனேஸ்வரிக்கும் காவேரிப்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த 15ஆம் தேதியன்று திருமணம் நடந்துள்ளது.

ஃப்க்

 திருமணம் முடிந்ததும் புதுமணத் தம்பதிகள் மணமகள் வீட்டில் தங்கியுள்ளனர்.   திருமணம் முடிந்த மறுநாள் 16 ஆம் தேதி அன்று இரவு புவனேஸ்வரி சாப்பிட்டுவிட்டு தூங்கு சென்றிருக்கிறார்.   மணமகள் வீட்டில் முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.  அங்கு கணவன் மணிகண்டனிடம் பேசி முதலிரவை தள்ளிப் போட்டிருக்கிறார்.  இதன் பின்னர் நீண்ட நேரம் பேசிய பின்னர் மணிகண்டன் தூங்கி இருக்கிறார். 

 அதிகாலை 5 மணிக்கு  புவனேஸ்வரியின்  பாட்டி கழிவறைக்குச் சென்று இருக்கிறார்.  அப்போது உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்ததால்,  உள்ளே யார் இருக்கிறார் என்று கேட்டிருக்கிறார்.   எந்த பதிலும் வரவில்லை என்பதால்,  திரும்ப திரும்ப உள்ளே யார் இருக்கிறார் என்று கதவை தட்டியும் எந்த பதிலும் வராததால் அதிர்ச்சி அடைந்த பாட்டி,    வீட்டின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த பேரன் சிவாவை எழுப்பியிருக்கிறார் அவர் பாதி தூக்கத்தில் விரைந்து வந்து ஜன்னல் வழியாக பார்த்து இருக்கிறார்.   பார்த்ததும் அவர் பதறி போய் சத்தம் போட்டிருக்கிறார்.  

உள்ளே தன் சகோதரி தூக்கில் தொங்குவதை பார்த்து இருக்கிறார்.  இதை அடுத்து பதறியடித்துக் கொண்டு ஓடி அவர் மணிகண்டன் அறைக்குச் சென்றிருக்கிறார்.  அங்கே தூங்கிக் கொண்டிருந்த மணிகண்டனை எழுப்பி வந்து விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்.  அவரும் ஜன்னல் வழியாக பார்த்தபோது தன் மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார். 

இதை எடுத்து அனைவரும் சேர்ந்து கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று புவனேஸ்வரியை தூக்கில் இருந்து கீழே இறக்கி  வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.   அங்கு புவனேஸ்வரி பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.  இதையடுத்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து புவனேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர்.

  போலீசார் நடத்திய விசாரணையில்,  புவனேஸ்வரிக்கு  திருமணத்தில் விருப்பம் இல்லை என்பதும்,  படித்து முடித்துவிட்டு திருமணம் செய்து கொள்கிறேன் அதற்கு முன்னர் திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என்று பெற்றோரிடம் தெரிவித்து இருந்ததாகவும்,, பெற்றோர்களின் கட்டாயத்தின் பேரில்தான் இந்த திருமணம் நடந்துள்ளது.  அதனால்தான் திருமணம் நடந்த இரண்டாவது நாளிலேயே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்ற விவரம் தெரிய வந்திருக்கிறது.