முரண்டு பிடித்ததால் ஓடும் ரயிலில் இருந்து இளம்பெண்ணை கீழே தள்ளிவிட்ட இளைஞர்

 
il

 ஆசைக்கு இணங்க மறுத்து முரண்டு பிடித்த தால் ஓடும் ரயிலில் இருந்து இளம்பெண்ணை கீழே தள்ளிவிட்டுள்ளார் கொடூர இளைஞர் .   உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த அந்த இளம்பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பந்தா மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் மத்திய பிரதேச மாநிலம் கஜ்ராஹோவில்  இருந்து உத்தரபிரதேச மாநிலம் மஹோபா வரை செல்லும் பயணிகள் ரயிலில் பயணித்திருக்கிறார்.    கடந்த ஏப்ரல் 27ம்  தேதியன்று அவர் பயணம் செய்திருக்கிறார்.

 மத்திய பிரதேச மாநிலத்தில் சத்தார்பூருக்கு ஒரு வேலையாகச் சென்று விட்டு தனது சொந்த ஊரான பந்தாவுக்கு திரும்பியிருக்கிறார் அந்த இளம்பெண்.  ரயிலில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது ஓடும் ரயிலில் அருகே இருந்த 30 வயது இளைஞர் ஒருவர் அந்த இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்திருக்கிறார்.  அந்த இளம்பெண் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

fi

 ஓடும் ரயிலில் தனது ஆசைக்கு இணங்குமாறு அந்த இளைஞர் அழைத்திருக்கிறார்.  அதற்கு அந்த இளம்பெண் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.  ஆனாலும் அந்த இளைஞர் விடாமல் அந்த இளம் பெண்ணை துன்புறுத்தி இருக்கிறார்.   ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த இளம்பெண் அந்த இளைஞரை கடுமையாக தாக்கிவிட்டு அந்தப் பெட்டியிலிருந்தும்  அந்த இளைஞரிடம் இருந்தும் தப்பிக்கும் முயற்சியில் வேகமாக முன்னேறிய போது ஆத்திரத்தில் அந்த பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து பிடித்து கீழே தள்ளி இருக்கிறார் அந்த இளைஞர்.   இதில் கஜ்ரஹோ அடுத்த ராஜ் நகர் என்கிற பகுதியில் அந்த பெண் கீழே விழுந்து இருக்கிறார்.

 கீழே விழுந்து கிடந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் அந்த பெண்ணை மீட்டு சத்தார்பூர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து இருக்கிறார்கள். மருத்துவமனையில் அந்தப் பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் குற்றவாளியை அடையாளம் கண்டு கைது செய்துள்ளார்கள்.

 ஆசைக்கு இணங்காத தால் ஓடும் ரயிலில் இருந்து இளம்பெண்ணை தள்ளிவிட்ட சம்பவம் உ.பி. மற்றும் ம.பியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.