கணவர் வெளிநாட்டில் இருந்ததால் தாய் மாமா மகனுடன் உறவு ! திடீரென்று வந்ததால் கூலிப்படையை ஏவிய மனைவி

 
x

 மதுரையில் திருப்பாலை பகுதியில் பிவிஆர் நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் . 35 வயதான இந்த வாலிபரின் மனைவி வைஷ்ணவி(24). இத் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. 

 செந்தில்குமார் வெளிநாட்டில் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்.   வருடத்திற்கு இரண்டு முறை தான் மதுரைக்கு வந்து குடும்பத்தை பார்த்து சென்றிருக்கிறார்.  கடந்த மாதம் மதுரை வந்த செந்தில்குமார் 27ஆம் தேதி  குழந்தையை பைக்கில் கொண்டு போய் பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது வழியில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் செந்தில்குமாரின் பைக்கை வழிமறித்து அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்று இருக்கிறார்கள்.

m

 ரத்த வெள்ளத்தில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.  சம்பவம் குறித்து அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  விசாரணையில் சந்தேகத்தின் பேரில் செந்தில் குமாரின் மனைவியிடம் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்திருக்கிறார் . 

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரின் செல்போனை எடுத்து ஆய்வு செய்தபோது நீண்ட நேரம் சிவகங்கை பகுதியைச் சேர்ந்த தாய் மாமா மகன் வெங்கடேசன் உடன் பேசியது தெரியவந்திருக்கிறது.   இதை அடுத்து வைஷ்ணவி இடம் துருவித்துருவி விசாரித்ததில் கணவனை கொலை செய்ய கூலிப்படை ஏவியதை ஒப்புக் கொண்டிருக்கிறார் வைஷ்ணவி.   இதை அடுத்து வைஷ்ணவியின் கள்ளக்காதலன் வெங்கடேசன்,  கூலிப்படை தலைவன் சாந்த குமார் உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.