மது கொடுத்து மயங்கவைத்து மாணவனை பலாத்காரம் செய்த டியூசன் டீச்சர்

 
ma

அளவுக்கு அதிகமாக மது கொடுத்து மாணவனை மயங்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் டியூசன் டீச்சர்.  தொடர்ந்து இப்படி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார்.   மாணவரின் நடவடிக்கை பார்த்து மனநலம் சரியில்லை என்று டாக்டரிடம் செல்ல, அதன்பின்னர் விபரம் தெரிந்து அதிர்ந்து, பெற்றோர் அளித்த புகாரில்  போலீசார் அந்தப் பெண்ணை கைது செய்துள்ளனர்.

 கேரள மாநிலத்தில் திருச்சூர் பகுதியில் வசித்து வரும் அந்தப் பெண் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.   34 வயதான அந்த பெண் ஜிம் பயிற்சியாளராக இருந்து வந்திருக்கிறார். கொரோனா காலத்தில் போதிய வருமானம் இல்லாமல் இருந்த நிலையில் அந்தப் பகுதி மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வந்திருக்கிறார்.  அதன் பின்னர் தொடர்ந்து அப்பகுதி மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வந்துள்ளார்.

ll

 அதே பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் அப்பெண்ணிடம் டியூஷன் படித்து வந்திருக்கிறார்.   அந்த மாணவர் மீது அந்த பெண் ஒரு கண் வைத்து வந்திருக்கிறார். 

 சம்பவத்தன்று அந்த மாணவருக்கு அளவுக்கு அதிகமாக மது கொடுத்து இருக்கிறார்.  இதில் அந்த மாணவர் மயங்கி இருக்கிறார்.  அதன் பின்னர் அந்த மாணவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் டியூசன் ஆசிரியை.   போதை தெளிந்ததும் மாணவனுக்கு நடந்தது தெரிய வந்திருக்கிறது.  ஆனாலும் மாணவன் அதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.  தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார்.  

இதனால் மாணவனின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது கண்டு பெற்றோர் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று நினைத்துள்ளனர்.  பள்ளி ஆசிரியர்களும் அதையே நினைத்துள்ளனர் .  இதனால் பள்ளியின் சார்பில் மன நல ஆலோசனை வழங்கப்பட்டு இருக்கிறது அந்த மாணவருக்கு.   அதன் பின்னர்தான் தனக்கு டியூஷன் செல்லும் போது நடந்த சம்பவங்கள் குறித்து கூறியிருக்கிறார்.  இதில் அதிர்ச்சி அடைந்த மனநல ஆலோசகர்,  இது குறித்து பள்ளி நிர்வாகத்திற்கும் மாணவரின் பெற்றோருக்கும் விசயத்தை சொல்லி இருக்கிறார்.

 இதை கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர்,  காவல் நிலையத்தில் புகார் அளிக்க,  அந்த டியூஷன் டீச்சர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.  இச்சம்பவம் திருச்சூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.