ஆண் நண்பர்களுடன் பேசியதால் 10 வயது மகளை கால்வாயில் தள்ளி கொன்ற பெற்றோர்

 
gi

ஆண் நண்பர்களுடன் பேசி வந்ததை தாயும் தந்தையும் கண்டித்து உள்ளனர்.  ஆனாலும் பத்து வயது சிறுமியான ஐந்தாம் வகுப்பு படித்து வந்த அந்த  சிறுமி பெற்றோரின் பேச்சை மீறிய ஆண் நண்பர்களுடன் செல்போனில் பேசி வந்திருக்கிறார்.   இதில் ஆத்திரமடைந்த பெற்றோர் தங்கள் மகளை கால்வாயில் வீசி மூச்சு திணறடித்து சாகடித்துள்ளனர்.

 உத்தரப்பிரதேச மாநிலத்தில் மீரட் பகுதியில் வசித்து வந்தவர்கள் பப்லு -ரோபி.  இந்த தம்பதிக்கு சௌமியா என்ற 10 வயது மகள் இருந்துள்ளார்.   அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்.   அந்த சிறுமி படித்து வந்த வகுப்பில்  மாணவர்கள் அதிகம்.   சிறுமியின் தந்தைக்கோ ஆண்களுடன் தங்கள் மகள் பேசுவதை விரும்பவில்லை.   இதனால்  யாரிடமும் பேசக்கூடாது என்று சிறுமியை பல முறை கண்டித்து வந்திருக்கிறார்.  

bo

 அதன் பின்னர் நண்பர்களுடன் பேசுவதை பெரும்பாலும் தவிர்த்து வந்திருக்கிறார் சிறுமி.  மாணவர்கள் அனைவரும் நன்றாக படித்து வந்த சிறுமியிடம் சந்தேகம் கேட்பது வழக்கமாக இருக்கிறது.   வீட்டிற்கு வந்தும் நண்பர்களுடன் பாடம் சம்பந்தமாக செல்ஃபோன் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார்.   இதை பார்த்து அவரது தந்தை கண்டித்து இருக்கிறார்.  தாயும் இனிய ஆண் நண்பர்களுடன் பழக கூடாது என்று எடுத்துச் சொல்லி இருக்கிறார்.   ஆனால் அவர்களின் பேச்சை எல்லாம் தவிர்த்து விட்டு மீண்டும் ஆண் நண்பர்களுடன்  பேசி வந்திருக்கிறார் .

இதனால் தங்கள் மகளை கொலை செய்து விட திட்டமிட்டு உள்ளனர்.   அதன்படி கடந்த வாரம் இரவு மகளை  ஹோட்டலுக்கு சாப்பிட அழைத்து சென்றிருக்கிறார்கள். பத்து மணியளவில் அந்த பகுதியில் இருக்கும் யமுனை கால்வாய் மேம்பாலத்துக்கு அழைத்து சென்று அங்கிருந்து மகளை தூக்கி கால்வாயில் வீசி இருக்கிறார்கள்.  இதில் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.    

இதன் பின்னர் பெற்றோர் தங்கள் மகளை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்துள்ளனர்.  போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அந்த தம்பதியின் மீது சந்தேகம் எழுந்திருக்கிறது.   இதை அடுத்து அவர்களிடம் விசாரணையில் பெற்றோர் மீது போலீசார் இருக்கு சந்தேகம் இருந்திருக்கிறது .    அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில்  தங்கள் மகளை கொன்றதை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 சிறுமியின் உடலை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் போலீசார்.