அப்பா..அப்பா..என்று கதறல் - மகளை தண்ணீரில் அழுத்தி ஆணவக்கொலை செய்த தந்தை

 
ப்ப்

அப்பா.. அப்பா.. என்று கதறிக்கொண்டு மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார் அந்த 15 வயது சிறுமி.  பழங்குடியின இளைஞருடனான காதலை கைவிட மறுத்ததால் தனது மகளை ஆணவக் கொலை செய்து விடும் முடிவுக்கு வந்த தந்தை,  மகளை சினிமா தியேட்டர், ஹோட்டல், நகை கடை, கோவில் என்று பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று சந்தோஷத்தை கொடுத்து விட்டு கடைசியாக இரவில் வீடு திரும்பும் பொழுது வழியில் உள்ள கால்வாயில் அழுத்தி மூச்சு திணறடித்து ஆணவ கொலை செய்திருக்கிறார்.

கர்நாடக மாநிலத்தில் பல்லாரி மாவட்டம் சித்தம்மனஹள்ளி  கிராமம்.  இக்கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி ஓம்கார கவுடா.  இவரது 15வது மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்.   அந்த மாணவிக்கும் கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்கிற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியிருக்கிறது.   இருவரும் அடிக்கடி உல்லாசமாக சுற்றி வந்து இருக்கிறார்கள்.

க்

 நாகராஜ் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்த இளைஞருடன் இனி பழகக் கூடாது என்று ஓம்கார கவுடா கடுமையாக கண்டித்து இருக்கிறார்.  காதலை மறந்து விடு என சொல்லி இருக்கிறார்.   ஆனால் மாணவி  நாகராஜுடன் தொடர்ந்து பழகி வந்திருக்கிறார்.   இதனால் ஆத்திரமடைந்த ஓம்கார கவுடா மகளை கடுமையாக எச்சரித்து இருக்கிறார்.  அப்படியும் கேட்காமல் நாகராஜுடன் பழகி ஊர் சுற்றி வந்திருக்கிறார் அந்த சிறுமி.

 இதனால் பெற்ற மகளை ஆணவக் கொலை செய்து விட வேண்டியது தான் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் ஓம்கார கவுடா.   இதை அடுத்து மகளை சினிமா பார்க்க அழைத்துச் சென்றிருக்கிறார்.   அதன் பின்னர் ஓட்டலுக்கு அழைத்துச் சென்று மகளுக்கு பிடித்த உணவுகளை எல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.  அங்கிருந்து நகை கடைக்கு சென்று மகளுக்கு கம்மல், மோதிரம் வாங்கி கொடுத்திருக்கிறார்.

 அதன் பின்னர் பசவேஸ்வரா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்கள்.    பின்னர் இரவு வீடு திரும்பி இருக்கிறார்கள்.  அப்போது வழியில் கிராமத்தில்  கால்வாய் ஓரம் பைக்கை நிறுத்திவிட்டு மகளைத் தர வரவென்று இழுத்துச் சென்று தண்ணீரில் வைத்து அழுத்தி இருக்கிறார்.  இதில் மூச்சு திணறி அப்பா... அப்பா.. என்று அந்த சிறுமி கதறி இருக்கிறார்.   ஆனால் ஆவேசமாக சிறுமியை தண்ணீரில் வைத்து அழுத்தியதில் மூச்சு திணறி அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

மகளைக் கொன்று விட்டு திருப்பதிக்கு  தப்பி சென்று இருக்கிறார் ஓங்கார கவுடா.   சந்தேகம் வரக்கூடாது வரக்கூடாது என்பதற்காக தனது மகளை காணவில்லை என்று ஓம்கார கௌடாவின் மனைவி போலீசில் புகார் அளித்திருக்கிறார்.  ஆனால்  விசாரணையில் பல சந்தேகங்கள் இருந்ததால் துருவி துருவி விசாரணை நடத்தியதில் வேறு சாதி இளைஞரை காதலித்ததால் ஆணவ கொலை செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது.   இது குறித்து ஓம்கார கௌடாவை பிடிக்க போலீசார் தேடி வருகின்றனர்.