மருமகள் ஓட ஓட விரட்டி நடுரோட்டில் சரமாரியாக வெட்டிக்கொலை

 
ச்

 நடுரோட்டில் மருமகளை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ள தாய்மாமனின் செயல் திருவனந்தபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் அடுத்த வர்க்கலா.   இப்பகுதியில்  வசித்து வந்த ஷாலு என்கிற முப்பத்தி ஏழு வயது இளம்பெண் அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார்.   இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் 9 வயதில் ஒரு மகன் 12 வயதில் ஒரு மகன் ஆகிய இரண்டு மகன்களுடன் வசித்து வந்துள்ளார்.

ஷ்

 இந்த நிலையில் கடந்த மாதம் ஏப்ரல் 28ஆம் தேதியன்று தனது நிறுவனத்தில் இருந்து சாப்பிடுவதற்காக வீட்டிற்கு ஸ்கூட்டரில் வந்திருக்கிறார்.  அப்போது அதே பகுதியில் வசித்து வந்த ஷாலுவின் தாய்மாமன் அணில் ,  ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நின்றிருக்கிறார்.  

 ஸ்கூட்டரில் வந்த ஷாலுவை மறித்திருக்கிறார்.   ஸ்கூட்டரை விட்டு ஷாலு இறங்கியதும்,   தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்திருக்கிறார்.  இதைப்பார்த்து மிரண்டுபோன ஷாலு, தப்பித்து ஓட முயற்சிக்க,   அவரை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி இருக்கிறார்.   இதில் மயக்கமடைந்து கீழே விழுந்ததும் அங்கிருந்து தப்பித்து ஓடியிருக்கிறார்.

ஷாலுவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு வர்க்கலா அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்துள்ளனர்.  அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.  

அன்

 தகவலறிந்த போலீஸார் வழக்குப்பதிவு செய்து அணிலின் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வந்த நிலையில்,  அணிலின் உறவினர்களே அவரை போலீசிடம் பிடித்து கொடுத்தனர் . 

திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஷாலு, நேற்று மாலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.   இதையடுத்து அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்த திருவனந்தபுரம் போலீசார்,   அவரை திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.