11 வருடத்திற்கு பின் வந்த சந்தேகம்- தூங்கும்போது மனைவி தலையில் அம்மிக்கல்லை தூக்கிப்போட்ட கணவர்

 
அ

காதலித்து திருமணம் செய்து கொண்ட 11 ஆண்டுகள் வாழ்ந்த பின்னர்  மனைவியின் நடத்தையில் அடிக்கடி சந்தேகம்  ஏற்பட்டிருக்கிறது.  மனைவி யாருடன் பேசினாலும் அவருடன் தறான உறவு இருக்குமோ என்று சந்தேகப்பட்டு வந்திருக்கிறார் கணவன்.   இந்த சந்தேகம் அதிகமாகி மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்திருக்கிறார்.

 ஆந்திர மாநிலத்தில் அனந்தபூர் மாவட்டம்.  அநம் மாவட்டத்தில் மல்லிகார்ஜூனா பள்ளியைச் சேர்ந்தவர் நாகார்ஜுனா.  32 வயதான இந்த வாலிபர்,  கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு சரஸ்வதி என்ற பெண்ணை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து இருக்கிறார்.   இத் தம்பதிக்கு எட்டு வயதில் ஒரு மகனும் நாலு வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

அம்மி

திருமணமாகி இரண்டு குழந்தைகள் பிறக்கும் வரைக்கும் நாகார்ஜுனாவும் சரஸ்வதியும் மகிழ்ச்சியாகவே குடும்பம் நடத்தி இருக்கிறார்கள்.  அதன் பின்னர் தான் மனைவியின் நடத்தையில் நாகர்ஜுனாவுக்கு சந்தேகம் வந்திருக்கிறது.   சரஸ்வதி யாருடன் பேசினாலும் அவருடன் மனைவிக்கு தவறான உறவு இருக்குமோ என்று சந்தேகப்பட்டு வந்திருக்கிறார் நாகார்ஜுனா . இதனால் மனைவியை அடிக்கடி அடித்து உதைத்திருக்கிறார்.

 நாளுக்கு நாள் இந்த சந்தேகமும் தகராறும் வலுத்து வந்திருக்கிறது.  இதனால் மனைவியை தீர்த்து கட்டி விட வேண்டும் என்று ஆத்திரமடைந்திருக்கிறார் நாகார்ஜுனா.  கடந்த சில தினங்களுக்கு முன்பாக மனைவியை வழக்கம் போல் சந்தேகப்பட்டு அடித்து உதைத்திருக்கிறார் .  அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்து இருக்கிறது . அதன் பின்னர் சரஸ்வதி படுத்து தூங்கியிருக்கிறார் .

நன்றாக தூங்கி கொண்டிருந்தபோது அம்மிக்கல்லை எடுத்து வந்து அவர் தலையில் போட்டு இருக்கிறார்.   இதில் அலறலுடன் துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார்.   ரத்த வெள்ளத்தில் மிதந்த தாயின் உடலை பார்த்து குழந்தைகள் கதறி அழுதிருக்கிறார்கள்.   சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிடார் சரஸ்வதி.  இதை அடுத்து மனைவியை கொலை செய்ய விட்டு தலைமறைவாக இருக்கும் நாகார்ஜுனாவை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்திருக்கிறார்கள்.