"எழுபது வயசுல எவனை வச்சிருக்கே" -பாட்டி மீது சந்தேகப்பட்ட 75 வயது தாத்தா - அடுத்து நேர்ந்த கொடுமை

 
hus wife


70 வயது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கொலை செய்த கணவரை போலீஸ் கைது செய்தது 

murder
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் மலாடில் (மேற்கு) மல்வானியில் கணவருடன் வசிக்கும் 
70 வயதான  மும்தாஜ் ஒரு பள்ளியில் துப்புரவு பணியாளராக இருந்தார்.அவரது கணவர் சம்ருதீன்  ஒரு நிறுவனத்தில் தொழிலாளியாக இருந்து ,ஓய்வு பெற்றவர் ஆவார் 
 இந்நிலையில் அந்த சம்ருதீனுக்கு அவரின் 70 வயதான மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு  அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார் .
அந்த தம்பதிகளின் மகன் ஷேக் இந்த சண்டையில் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தி வந்தார் .அந்த ஷேக் தன்  மனைவியுடன் தனியாக வேறு வீட்டில் வசித்து வருகிறார் 
இந்நிலையில் அந்த 70 வயது மனைவி மீது நடத்தையில் சந்தேகப்பட்டு அந்த கணவர் அவரை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டார் .பின்னர் தானும் தற்கொலைக்கு முயன்றார் .இது பற்றி தகவலறிந்த அந்த மகன் ஷேக் அந்த வீட்டிற்கு ஓடி வந்து பார்த்த போது அங்கு அவரின் தாய் இறந்து  கிடப்பதும், அருகே ரத்தம் தோய்ந்த  கத்தியுடன் தந்தை  உயிருக்கு போராடுவதையும்  பார்த்து போலீசுக்கு தகவல் சொன்னார் .போலீசார்  அந்த இடத்திற்கு வந்து விசாரணை செய்து கொலை செய்த சம்ருதீனை கைது செய்தனர்