தனிமையில் இருந்த மாமியாரை பாலியல் பலாத்காரம் செய்த மருமகனுக்கு 5 ஆண்டுகள் சிறை

 
h

வீட்டில் தனியாக இருந்த மாமியாரை பாலியல் பலாத்காரம் செய்த மருமகனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

 ஆந்திர மாநிலத்தில் சிராஸ் பகுதியை சேர்ந்த பெண் செருப்பு கடை நடத்தி வந்துள்ளார்.  இவருக்கு ஒரு மகள் உண்டு.   தன் மகளை சித்தூர்  மாவட்டத்தைச் சேர்ந்த கோலா ஜான் என்பவருக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்.

 தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.   திருமணத்திற்கு பின்னர் சில ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்த மருமகன் கோலா ஜான் திடீரென்று மனைவியே வரதட்சனை வாங்கி வரும்படி சொல்லி அடித்து துன்புறுத்தி இருக்கிறார்.   இதன் பின்னர் அவரது மனைவி  தாய் வீட்டிற்கு சென்று இருக்கிறார்.

f

 இந்த நிலையில் மாமியார் வீட்டிற்கு சென்ற கோலா ஜான்  மாமியாரை தகாத வார்த்தைகளில் பேசியிருக்கிறார்.  மனைவியை சமாதானப்படுத்தி அழைத்துச் செல்ல வேண்டும் என்று மாமியார் வீட்டிலே தங்கியிருந்திருக்கிறார்.   அப்போது தனிமையில் இருந்த மாமியாரைன் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். 

 மருமகனிடமிருந்து தப்பித்து அலறி அடித்துக் கொண்டு  வெளியே ஓடி வந்திருக்கிறார் மாமியார்.  அதன் பின்னர் தன்னை மானபங்கப் படுத்திய மருமகன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.   புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வந்துள்ளனர் .  

கோலா ஜான் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.   இதில் கோலா ஜான் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் கோலா ஜானுக்கு 5 ஆண்டுகள்  சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.   மேலும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.    அபராதம் செலுத்த தவறினால்  மேலும் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது செசன்ஸ் நீதிமன்றம்.