சிறுவன் உட்பட ஆறு பேர் சேர்ந்து.. 23 வயது பெண்ணுக்கு நேர்ந்த கதி

 
ku

 சிறுவன் உட்பட ஆறு பேர் சேர்ந்து  23 வயது பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.   கூலி வேலைக்காக அழைத்து வரப்பட்ட அந்த பெண்ணுக்கு நேர்ந்த கதியை அடுத்து போலீசார் சம்பந்தப்பட்டவர்கள் ஆறு பேரையும் கைது செய்துள்ளனர்.

 மத்திய பிரதேச மாநிலத்தில் திகாம்கர் பகுதியில் நேற்று இரவில் கட்டுமான பணிகள் நடந்து வரும் ஒரு கட்டிடத்தில் மது போதையில் இருந்த ஆறு பேரும் 23 வயதான இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

ku

 சத்தர்பூர்  மாவட்டத்தில் இருந்து கூலி வேலைக்காக அழைத்து வரப்பட்டவர்  அந்த இளம் பெண்.   அந்த பெண்ணைத்தான் ஆறு பேரும் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

 இன்று காலையில் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் போலீசில் சென்று புகார் அளித்திருக்கிறார்.   இதை அடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வெவ்வேறு இடங்களில் பதுங்கி இருந்த அந்த ஆறு பேரையும் கைது செய்துள்ளனர்.   அந்த ஆறு பேரில் ஒருவர் கட்டிடத்தில் வாட்ச்மேனாக இருந்துள்ளார் என்பது தெரிய வந்திருக்கிறது . அந்த ஆறு பேரில் ஒருவர் பதினாறு வயது சிறுவன் என்பது தெரிய வந்திருக்கிறது.

 கோட்வாலி போலீசார் தொடர்ந்து அந்த ஆறு பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.