தங்கை கர்ப்பம் - அண்ணன் தலைமறைவு

 
ka

தங்கையை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததில் அச்சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார்.  இதை அடுத்து அண்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ய தேடி வருகின்றனர் போலீசார்.

 வேலூர் மாவட்டத்தில் ஓட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி.   இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.   கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக வீட்டில்  பெற்றோர் இல்லாத நேரத்தில் இந்த மாணவியை கூடப் பிறந்த அண்ணனே மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

y

 அண்ணன் என்ற பாசம் ஒருபுறம்,  கூட பிறந்த அண்ணனே இப்படி செய்து விட்ட வேதனை,  பெற்றோரிடம் இதை சொல்ல சங்கடப்பட்டு கொண்டே இருந்திருக்கிறார் அந்த சிறுமி. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த இளைஞர் அடிக்கடி தங்கையை விரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

 இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்திருக்கிறார்.  மூன்று கால மாத கர்ப்பமாக இருந்ததால் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது .  உடனே அச்சிறுமியை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள் .   அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அச்சிறுமி கர்ப்பம் அடைந்து உள்ளதாக தெரிவித்துள்ளனர்.   இதைக் கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

 மருத்துவமனை நிர்வாகம் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து இருக்கிறது.   இதை அடுத்து போலீசார் விரைந்து வந்து அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் கூட பிறந்த அண்ணனே தன்னை பலாத்காரம் செய்து வந்ததைச் சொல்லி அழுது இருக்கிறார்.  இதைக்கேட்டு அச்சிறுமியின் தாயாரும் மகன் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.   பின்னர் அந்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய தேடி வருகின்றனர்.