பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்! விஷம் கொடுத்ததில் மகன் பிழைத்துக்கொண்டதால் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த தந்தை

 
ஃப்ஃப்

விஷம் வைத்ததில் மகன் பிழைத்துக் கொண்டதால் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்திருக்கிறார் தந்தை .   மனைவியின் நடத்தையின் மீது உள்ள சந்தேகத்தில் அவரை பழி வாங்க வேண்டும் என்பதற்காக மகனை இப்படி கொலை செய்ய துடித்திருக்கிறார் கொடூரத் தந்தை.   ஆந்திர மாநிலத்தில் நடந்திருக்கிறது இந்த அதிர்ச்சி சம்பவம் .

க்

திருப்பதி மாவட்டத்தில்  நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்.   இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.   இவரது மனைவி ஐஸ்வர்யா.  இத்தம்பதிக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.   ரமேஷுக்கு தன் மனைவியை ஐஸ்வர்யாவின்  நடத்தையில் பல மாதங்களாகவே சந்தேகம் இருந்திருக்கிறது.   இதனால் இது குறித்து மனைவியிடம்  கேட்டு அடிக்கடி சண்டை போட்டு வந்திருக்கிறார்.   ஆனால் மனைவி ஐஸ்வர்யா,  அப்படி எதுவும் இல்லை என்று பதிலுக்கு பதில் வாக்குவாதம் செய்து வந்திருக்கிறார்.

 இதனால் மனைவியை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று திட்டம் போட்டு இருக்கிறார் ரமேஷ் .  மனைவியை பழிவாங்க வேண்டும் என்றால் தன் மகனை கொன்று விட வேண்டும் என்று அவர் சைக்கோ தனமாக திட்டமிட்டு இருக்கிறார்.   அதன்படி ஒன்பது வயது மகன் மகேஷுக்கு கட்டாயப்படுத்தி பூச்சி மருந்தை குடிக்க வைத்திருக்கிறார்.   இதை பார்த்துவிட்டு பதறி அடித்து ஓடி வந்த ரமேஷின் தாய் தனது பேரன் மகேஷை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு  கொண்டு சென்று சேர்த்து இருக்கிறார்.   அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து அந்த சிறுவனை பிழைக்க வைத்திருக்கிறார்கள்.

ச்ச்

 வீடு திரும்பி  ஓய்வில் இருந்த மகனிடம் எங்கே உன் அம்மா என்று கேட்டிருக்கிறார் ரமேஷ்.   தெரியவில்லை என்று சொன்னதும்,  வீட்டிற்கு வெளியே அழைத்துச் சென்று வாசலில் நிற்க வைத்து,   அந்த சிறுவன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்திருக்கிறார்.  உடலில் தீப்பற்றிய சிறுவன் போட்ட அலறல் சத்தத்தில் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர். 

 ஏற்கனவே விஷம் கொடுத்து குழந்தையை சாகடிக்க செய்த முயற்சி ஊர் முழுவதும் தெரிந்திருந்தால் மீண்டும் இப்படி ஒரு செயலைச் செய்ததால் ஆவேசமடைந்த பொதுமக்கள் ரமேஷை சரமாரியாக தாக்கி போலீசிடம் பிடித்து கொடுத்து இருக்கிறார்கள் .  ரமேஷ் மீது வழக்கை பதிவு செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரி நடத்தி வருகின்றார்கள்.

பெற்ற தந்தையே மகனின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கும் அந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி அந்த காட்சிகள் தற்போது வெளியாகி  பார்ப்போரை பதை வதைக்க வைத்திருக்கின்றன.