சிறையில் கதறும் கட்சித்தலைவர்! கணவனை இழந்த பெண்ணை கதற வைத்ததற்கு தண்டனை

 
s

 கணவனை இழந்த பெண்ணை மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த கட்சித்தலைவர்- முன்னாள் எம்.எல்.ஏவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது   இதையடுத்து அவர் தொடர்ந்து சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

 பஞ்சாப் மாநிலத்தில் லோக் இன்சப் கட்சியின் தலைவர் சிம்ரஜித் சிங் பைன்ஸ் (52). இவர் லூதியானா மாவட்டம் இட்டம் நகர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரைக்கும் இருந்துள்ளார்.

si

 கடந்த 2020ஆம் ஆண்டில் கணவனை இழந்த 44 வயது பெண் சொத்து தகராறு தொடர்பாக உதவி கேட்டு சிம்ரஜித்திடம் சென்று இருக்கிறார்.  அப்போது அந்த பெண்ணை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.  இதை அடுத்து அந்த பெண் போலீசில் புகார் அளிக்க போலீசார் சிம்ரஜித் மீது வழக்கு பதிவு செய்தனர். 

 இதன் பின்னர் சிம்ரஜித் லூதியானா நீதிமன்றத்தில் சரணடைந்தார்.   கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சிம்ரஜித் சிறையில் அடைக்கப்பட்டார்.   இந்த பாலியல் வழக்கில்  சிம்ரஜித் சிங்கின் சகோதரர் மற்றும் அவரது தனி உதவியாளரும் கைது செய்யப்பட்டனர்.   அவர்கள் இருவருக்கும் கடந்த ஆகஸ்ட் 12 மற்றும் 25 தேதிகளில் ஜாமீன் கிடைத்து விட்டது.   ஆனால் இந்த வழக்கில் சிம்ரஜித்துக்கு மட்டும் ஜாமீன் கிடைக்கவில்லை.

 இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி சிறையில் இருக்கும் சிம்ரஜித் லூதியானா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.   நேற்று இந்த மனுவை விசாரித்த லூதியானா கூடுதல் அமர்வு நீதிமன்றம்,   சிம்ரஜித்துக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது.   இதை அடுத்து சிம்ரஜித் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.