வகுப்பறையில் மாணவியிடம் சில்மிஷம்! தலைமை ஆசிரியரை துரத்தி துரத்தி அடித்த உறவினர்கள்

 
ட்

 வகுப்பறையில் ஏழாம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக பயந்துபோன அந்த மாணவி உடனடியாக பள்ளியை விட்டு வெளியேறி வீட்டிற்குச் சென்று பெற்றோர்களிடம் சொல்லி அழுதிருக்கிறார்.  பெற்றோர்களும் உறவினர்களும் திரண்டு வந்து தலைமை ஆசிரியரை அடித்து உதைத்து அதில் அவர் அடி தாங்க முடியாமல் காரில் ஏறி தப்பித்து சென்றிருக்கிறார்.  அப்படியும் பின்தொடர்ந்து சென்று காரின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி இருக்கிறார்கள்.

 கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  தேன்கனிக்கோட்டை அருகே கெம்பக்கரை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. தேன்கனிக்கோட்டையை சேர்ந்த லாரன்ஸ் என்பவர் இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.  102 மாணவ,  மாணவிகள் படித்து வரும் இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் லாரன்ஸ் உட்பட 4 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

அர்

 நேற்று தலைமை ஆசிரியர் லாரன்ஸ் மற்றும் பள்ளிக்கு சென்று இருக்கிறார்.  பணி நிமித்தமான  கூட்டத்திற்கு மற்ற மூன்று ஆசிரியர்களும் சென்றிருக்கிறார்கள்.  அந்த பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு இருக்கிறார் லாரன்ஸ்.  இதனால் பயந்து போன அந்த மாணவி தலைமை ஆசிரியரை உதறித் தள்ளி விட்டு வீட்டுக்கு ஓடியிருக்கிறார்.   பெற்றோரிடம் தனக்கு நடந்ததை சொல்லி அழுதிருக்கிறார். 

  இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த பெற்றோர் உறவினர்களிடம் சொல்லி,   பெற்றோர்கள் உறவினர்கள் என்று பள்ளிக்கு திரண்டு சென்றிருக்கிறார்கள்.   அங்கே தலைமை ஆசிரியரிடம் இதுகுறித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.   பின்னர் அவரை இழுத்து போட்டு அடித்து உதைக்கிறார்கள் .  இதில் அடி தாங்க முடியாமல் தப்பித்து ஓடிய லாரன்ஸை தனது காரில் ஏற்றி தேன்கனிக்கோட்டைக்கு செல்ல முயன்று இருக்கிறார். ஆனால் பின் தொடர்ந்து  சென்ற மாணவியின் கும்பல் கார் கண்ணாடியை அடித்து உதைத்து கல்வீசி தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.  அப்படியும் தப்பித்து தேன்கனிக்கோட்டை சென்றிருக்கிறார் .

நடந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  தகவலறிந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர் அன்பழகன்,  அஞ்செட்டி போலீசார் ஆகியோர் கிராமத்திற்கு சென்று இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.