பெண் குழந்தைகளை ஏரியில் வீசி கொன்று தாயும் குதித்து தற்கொலை

 
m

வரதட்சனை கொடுமையால் இரண்டு குழந்தைகளை ஏரியில் வீசி கொலை செய்துவிட்டு தாயும் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.  கர்நாடக மாநிலத்தில் கோலார் மாவட்டத்தில் நடந்திருக்கிறது இந்த சம்பவம்.

 கோலார் மாவட்டத்தில் சொக்கண்டஹள்ளி கிராமம்.   இக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வேணுகோபால்.  இவருக்கும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பேபிக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்திருக்கிறது.   இத்தம்பதிக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையும்,  ஒன்பது  பெண் கைக்குழந்தையும் இருந்திருக்கிறது.

s

 கணவன் மனைவிக்கிடையே கடந்த சில நாட்களாக தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.   இதனால் ஆத்திரம் அடைந்த அந்த தாய் தற்கொலை முடிவு க்கு வந்திருக்கிறார்.   தனக்கு பின்னால் குழந்தைகளின் நிலையை எண்ணிப் பார்த்த அந்த தாய் குழந்தைகளையும் கொன்று விட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து இருக்கிறார்.

 அதே கிராமத்தில் உள்ள தொட்டகெரே ஏரியில் குழந்தைகளை வீசி கொன்றுவிட்டு அதன் பின்னர் தானும் ஏரியில் குதித்து மூழ்கி உயிரிழந்திருக்கிறார்.  குழந்தைகளையும் பேபியையும் காணவில்லை என்று குடும்பத்தினர் பல இடங்களிலும் தேடி வந்திருக்கிறார்கள்.   அப்போதுதான் ஏரியில் மூன்று பேரின் உடல்கள் மிதந்து இருக்கின்றன.   இதை பார்த்த கிராம மக்கள் குடும்பத்தினருக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்து இருக்கிறார்கள்.

 சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூன்று பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கிறார்கள்.    மூன்று பேரின் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த போது தான்,   கணவர் வரதட்சனை கொடுமையால் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த மரணங்கள் நிகழ்ந்தது தெரிய வந்திருக்கிறது.

 வரதட்சணையை தகராறால் அடிக்கடி தாய் வீட்டிற்கு சென்று பணம் வாங்கும்படி கொடுமைப்படுத்தி வந்திருக்கிறார் வேணுகோபால் .  இதனால் பேபிக்கும் வேணுகோபாலுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது என்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.   வரதட்சனை கொடுமையால் தான் இரண்டு பெண் குழந்தைகளையும் கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்பது தெரிய வந்தது .  இதை அடுத்து வேணுகோபாலை கைது செய்ய வேண்டும் என்று போலீசாரிடம் பேபியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில்  கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.