உன் மருமகள் என்னுடன் உடலுறவு வச்சிக்கிட்டா கணவன் - மனைவி பிரச்சனை தீர்ந்துவிடும்!மாமியாரை நம்ப வைத்த மந்திரவாதி

 
g

 உன் மருமகள் என்னுடன் உடலுறவு வைத்துக் கொண்டால் கணவன்- மனைவி பிரச்சனை தீர்ந்துவிடும் என்று மந்திரவாதி சொல்ல,  அவரின் பேச்சை நம்பி மாமியாரும் மருமகளை மந்திரவாதியிடம் அனுப்ப,  79 நாட்கள் அந்த பெண்ணை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.   அதுவும் அந்த பெண்ணின் இரண்டு வயது மகனின் கண் முன்னேயே இந்த கொடுமையை செய்திருக்கிறார்.

 ஒடிசா மாநிலத்தில் பாலசோர் மாவட்டம்.   இம்மாவட்டத்தைச் சேர்ந்த நபர் கடந்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்திருக்கிறார்.   திருமணமான சில மாதங்களிலேயே தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது.   மாமியாரும் மருமகளை சித்திரவதை செய்து வந்திருக்கிறார்.

hh

 இதற்கிடையில் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது.   தற்போது அந்த குழந்தைக்கு இரண்டரை வயதாகிறது.   இந்த நிலையில் மருமகளுக்கு பித்து பிடித்து விட்டதாக சொல்லி மந்திரவாதியிடம் அழைத்துச் சென்று இருக்கிறார் மாமியார்.   அந்த மந்திரவாதியோ உன் மருமகள் என்னுடன் உடலுறவு வைத்துக் கொண்டால் கணவன்- மனைவி பிரச்சனை தீர்ந்து விடும்.   குடும்பத்தின் பிரச்சினை எல்லாம் தீர்ந்துவிடும் என்று சொல்ல,   அதை நம்பிய அந்த மாமியாரும் மருமகளை மந்திரவாதியுடன் உடலுறவு வைத்துக் கொள்ள கட்டாயப்படுத்தி இருக்கிறார். 

 மருமகள் அதற்கு சம்மதிக்காமல் இருந்திருக்கிறார்.   மருமகளையும் பேரனையும் மந்திரவாதியிடம் சென்று ஒப்படைத்து விட்டு வந்திருக்கிறார் மாமியார்.   மந்திரவாதி அந்த பெண்ணை ஒரு அறையில் பூட்டி வைத்து விட்டு அவரது இரண்டரை வயது மகனை வெளியே விட்டு இருக்கிறார்.   அந்த சிறுவனின்  கண் முன்னையே 79 நாட்கள் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார்.  

s

79 நாட்களுக்கு பின்னர் அந்த பெண்ணிற்கு ஏற்பட்ட நிலைமை உறவினர்கள் மூலமாக போலீசாருக்கு தெரியவந்திருக்கிறது.   இதை அடுத்து போலீசார் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி எங்கள் மந்திரவாதியின் பிடியில் இருந்த அந்த பெண்ணையும் குழந்தையையும் மீட்டிருக்கிறார்கள் .   மந்திரவாதியின் தொடர் சித்திரவதையால் பெண்ணுக்கு உடல் முழுவதும் காயங்கள் இருந்துள்ளன.   அந்த பெண்ணின் இரண்டரை வயது மகனையும் தாக்கியதால் கையில் எலும்பு ஏற்பட்டிருந்தது.  இதை  எல்லாம் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார்,   பெண்ணையும் குழந்தையையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து,   மந்திரவாதி, மாமியார், மாமனார் மைத்துனர், அப்பெண்ணின் கணவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 இந்த வழக்கில் யாரும் இதுவரைக்கும் கைது செய்யப்படவில்லை என்பதால் ஒடிசாவில் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.