மனைவியை கொன்று நாடகமாடிய கணவன்! பகீர் பின்னணி

 
Murder

குடிபோதையில் மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவன், தற்கொலை என நாடக மாறியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. 

Murder

சென்னை தண்டையார்பேட்டை கருணாநிதி நகர்  2 வது தெருவில் வசித்து வருபவர் நந்தகுமார். அம்பத்தூரில் கார் உதிரி பாகம் தயாரிக்கும் (32)தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மணலியை சேர்ந்த பபிதா(30) என்ற  பெண்னை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 9 வயதில் ஒரு பெண்குழந்தையும் 7வயதில் ஆண்குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 31ஆம் தேதி பப்பிதாவின் சகோதரர் மகளுக்கு பிறந்த நாளை கொண்டாடுவதற்காக மணலி தனது தந்தை வீட்டில் சென்று உள்ளார. பின்னர் மறுநாள் புத்தாண்டு அன்று மாலை தண்டையார்பேட்டையில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர்  31 ஆம் தேதி நண்பர்களுடன் குடிப்பதற்கான காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் படகில் சென்று குடித்து விட்டு பின்னர் 1தேதி அன்று தனது வீட்டில் நண்பர்களுடன் மது அருந்தி புத்தாண்டு கொண்டாடி உள்ளார். 

தந்தை வீட்டுக்கு சென்ற பபிதா வீட்டிற்கு வந்து பார்த்த போது பபிதா வீடு வீடாக இல்லாமல்  இருந்ததை கண்டு, பபிதா கணவரிடம் கோபப்பட்டு சண்டையிட்டுள்ளார். ஒருகட்டத்தில் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றவே உன் கூட வாழ பிடிக்க வில்லை என்று பபிதா தற்கொலைக்கு முயற்சி செய்ய  முயன்றுள்ளார். அதனை சாதகமாக பயன்படுத்தி நீ என்ன சாவுரது என்று மனைவியை புடவையால் கழுத்தை நெரித்து மெத்தை மீது தள்ளி விட்டு போதையில் கணவர் உறங்க சென்றுள்ளார். பின்னர் குழந்தைகள் இருவரும் தாயை எழுப்பியும் எழாததால் தந்தையிடம் குழந்தைகள் கூறவே தந்தை மூச்சற்ற நிலையில் இருந்த பபிதாவை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.


அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டார் என கூறியுள்ளனர். இதனை அடுத்து மனைவி மயக்கம் போட்டு விழுந்ததாக பபிதாவின் உறவினர்களுக்கு நந்தகுமார் தகவல் தெரிவித்துள்ளார். பதறி அடித்து ஓடி வந்து  அப்போலோ மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கும் போது அவர் இறந்து விட்டதாக தெரிந்தது. மேலும் கழுத்தில் நெரிக்கப்பட்டதற்கான அறிகுறிகளும் காயங்களும் இருப்பதை கண்டு மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த ஆர்கே  நகர் போலிசார் நந்தகுமாரை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் பபிதாவுக்கு லோ பிபி இருந்ததாகவும் மயக்கம் போட்டு வீட்டில் இருந்ததால் மருத்துவ மனைக்கு அழைத்து சென்றதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பபிதாவின் உடலை கைப்பற்றி பிரேத ப‌ரிசோதனை‌க்காக அரசு ஸ்டான்லி மரு‌த்துவமனை‌க்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார்  சந்தேகம் மரணம் என்று வழக்கு பதிவு செய்து நத்தகுமார் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்தனர். பின்னர் பிரேத ப‌ரிசோதனை‌யில் பபிதா கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையில்  குடித்து விட்டு வீட்டில் இருந்த போது மனைவி என்னிடம் தகராறில் ஈடுபட்டதாகவும் உன் கூட வாழ பிடிக்க வில்லை என்று கூறி படுக்கை அறையில் தூக்கிட்டு போவதை பார்த்து அந்த துணியால் கழுத்து நெரித்து பின்னர் மெத்தை மீது தள்ளியதாகவும் தெரிவித்தார். பின்னர் மனைவி கொலை செய்த குற்றத்திற்காக போலீசார் கொலை வழக்கு பதிவு விசாரணை ஈடுபட்டு வருகின்றனர்.