தவறான நடத்தையால் மனைவியை செங்கலால் தாக்கி கொலை செய்த கணவர்

 
Murder

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மனைவியின் தவறான நடத்தையால் கோபமடைந்த கணவர், மனைவியை செங்கலால் தாக்கி கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Murder cases that hogged media headlines | India.com

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் உமா ராணி, இவர் அதே பகுதியை சேர்ந்த நடராஜ் என்பவரை கடந்த 10 வருடங்களுக்கு் பெரியோர்கள் முன்பு திருமணம் செய்த நிலையில், கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணவன்-மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதையடுத்து இரண்டு மகன்கள் உள்ள நிலையில் இளைய மகன் உமா ராணியிடம் வளர்ந்து வரும் நிலையில், மனைவியின் தவறான நடத்தையால் மகனை தன்னிடம் அனுப்புமாறு கணவர் நடராஜ் கேட்டு வந்துள்ளார். 

இதை தொடர்ந்து மனைவி உமா ராணியும் மகனை அனுப்ப சம்மதிக்காததால், கணவர் நடராஜ் மனைவி மீது மிகுந்த கோபத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் மகனை பார்க்க சென்றபோது மனைவி உமாராணி தவறான உறவில் இருந்ததால் ஆத்திரமடைந்த கணவர் நடராஜ், கீழே கிடந்த செங்கலை எடுத்து தலையில் தாக்கியதில், பலத்த காயமடைந்த மனைவி உமாரணியை அப்பகுதியினர் மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்த போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதன் பின்னர் மனைவியை கொலை செய்த  கணவர் நடராஜன், தானாக குமாரபாளையம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். 

இதனையடுத்து குமாரபாளையம் போலீசார் நடராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவியின் தவறான செயலால் கோபமடைந்த கணவர் மனைவியை செங்கலால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.