மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த கணவன்

 
murder

நாகர்கோவிலில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்

Man arrested for murder of 31-year-old woman | Cities News,The Indian  Express

நாகர்கோவில் அருகே புன்னைநகரை சேர்ந்த முகமது உசேன். இவர் ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவரது  மனைவி ரெஜினா பானு (வயது 26) இவர்களுக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகிறது கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.  தகராறு காரணமாக மனைவி ரெஜினா பானுவை கணவர் முகமது உசேன் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. தனது மனைவி உடல் நலமில்லாமல் இறந்து விட்டதாக முகம்மது உசேன் கூறினார். இதுகுறித்து தகவல் அறிந்த நேசமணி நகர் போலீசார் ரெஜினா பானுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்தார்கள். அப்போது அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து முகமது உசேனிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில் தகராறு காரணமாக மனைவி கழுத்தை நெரித்து கொலை செய்ததை முகமது உசேன் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரை நேசமணி நகர் போலீசார் கைது செய்தனர்