ஓரினச்சேர்க்கையில் தகராறு - சிறுவனை கொன்றுவிட்டு இளைஞர் தற்கொலை

 
su

ஓரினச்சேர்க்கையில் ஏற்பட்ட தகராறில் சிறுவனை கை, கால்களை கட்டி வாயை கட்டி கொன்றுவிட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.  மத்திய பிரதேசத்தில் நடந்திருக்கிறது இந்த சம்பவம்.

மத்திய பிரதேச மாநிலத்தில் குவாலியர் நகர் பகுதியில் பழைய ஜேசி மில் வளாகத்தில் கை, வாய், கால்கள் கட்டப்பட்ட நிலையில் 15 வயது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டிருக்கிறது.  இது குறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வந்தனர்.  சிறுவன் உடல் கிடந்த அந்த இடத்தில் மேக்கப் உபகரணம் ஒன்று கிடந்துள்ளது.  இதனால், மேக்கப் கலைஞர் கொலையை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

gg

 இந்த நிலையில் முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஹசிரா பகுதியில் 20 வயது இளைஞர் வீட்டு தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது.  அவர் மேக்கப் கலைஞர் என்பதும் தெரியவந்திருக்கிறது. 

இதையடுத்து அந்த இளைஞரின் வீட்டில் சோதனை செய்ததில்  அங்கு தற்கொலை கடிதம் ஒன்று சிக்கி இருக்கிறது.  அதில், சிறுவன் என்னுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டான்.  அதன் பின்னர் அதை வைத்து என்னை பிளாக்மெயில் செய்து மிரட்டி வந்தான். இதனால் அவனை கொன்றுவிட்டு நானும் தற்கொலை செய்துகொண்டேன் இருந்திருக்கிறது.  

சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.   பிரேத பரிசோதனை அறிக்கை  வந்தவுடன்  மேற்கொண்டு விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.