பெற்ற மகளை 2 பேருடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த தந்தை

 
rape

பெற்ற மகளை  இரண்டு பேருடன் சேர்ந்து தந்தை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Aided rape of daughter': Special court Kupwara denies bail to woman


திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே  அரித்துவாரமங்கலம்,  மேல காலனி தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 45). இவரது மனைவி குடும்ப பிரச்சனை காரணமாக   பிரிந்து சென்று விட்டார். இவர்களுக்கு 4 குழந்தைகள். இதில் 2 பெண் குழந்தைகள் தந்தை வளர்ப்பிலும், ஒரு பெண் குழந்தை ஒரு ஆண் குழந்தை தாத்தா பாட்டியிடமும் வளர்ந்து வந்துள்ளனர்.  தந்தையிடம் வளர்ந்து வந்த பெண் குழந்தைகள் காவியா (வயது 13 மாற்றுத்திறனாளி) மற்றும் வினோதினி (வயது 7) ஆகிய இரு குழந்தைகளையும் பார்த்து வந்த  தந்தை கார்த்திக்,  மதுபோதையில்  நாள்தோறும் மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக தெரிகிறது.

இதனை தெரிந்து கொண்ட சிறுமியின்  மாமன் சுதாகர்  மற்றும் அதே தெருவை சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோர்  இந்த சிறுமியை தொடர்ந்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் . குழந்தையின் உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து அருகில் வசிப்பவர்களிடம் சிறுமி அந்த தெரிவித்துள்ளார். இதை கேட்ட  அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள்  திருவாரூரில் உள்ள  சமூக குழந்தைகள் நலன் பாதுகாப்பு துறை அலுவலகத்திற்கு  தொலைபேசி மூலமாக புகார் தெரிவித்துள்ளனர். சமூக குழந்தைகள் நல பாதுகாப்பு மைய அதிகாரிகள் அதனை அடுத்து சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட சிறுமியிடம்  விசாரணை நடத்தியதில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டது.  இதனையடுத்து சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேர் மீதும்  குழந்தைகள் பாதுகாப்பு துறை அதிகாரிகள் அரித்துவாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். 

இதனையடுத்து மூன்று பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு தந்தை கார்த்தி, மாமன்  சுதாகர் ஆகிய இருவரையும்  காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவான ராஜேந்திரன் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.