பாலத்தின் கீழ் தண்ணீரில் மிதந்த உடல் பாகங்கள் - பதறி அடித்து ஓடிய இளைஞர்கள்

 
a

ஒருவரை கொன்று துண்டு துண்டாக வெட்டி பாலத்தின் அடியில் தேங்கியிருக்கும் தண்ணீரில் வீசிச் சென்று இருக்கிறார்கள்.   அந்த பக்கமாக கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் தண்ணீரில் மிதந்த உடல் பாகங்களை பார்த்துவிட்டு போலீசார் அந்த உடலை பாகங்களை கைப்பற்றி கொலை செய்யப்பட்ட நபர் யார்? கொலை செய்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரி

 ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டினம் மாவட்டம் அருகே அனக்காபள்ளி அடுத்த கொத்த பள்ளம் கிராமம்.   இக்கிராமத்தில் ஒருவரை கொன்று துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்களை  பாலத்தின் கீழ் தேங்கியிருக்கும் தண்ணீரில் வீசி இருக்கிறார்கள்.  

அப்பகுதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள்  தண்ணீரில் உடல் பாகங்கள் மிதப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல் பாகங்களை கேட்டு பிரேத பரிசோதனைக்காக அனக்காபள்ளி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்திருக்கிறார்கள். 

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து  கொலை செய்யப்பட்ட நபர் யார்? கொலை செய்கிறவர்கள் யார் ? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.