மாட்டிறைச்சி! 2 பழங்குடியினர் 20 பேரால் அடித்துக் கொலை

 
ma

பசுவை கொன்றதாக இரண்டு பழங்குடியினர் 20 பேரால் அடித்து தாக்கப்பட்டதில்  உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.  மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது இந்த சம்பவம்.

 அம்மாநிலத்தில் இரண்டு பழங்குடியினர் பசுவை அடித்து கொன்று விட்டதாக சொல்லி அவர்கள் இருவரையும் அடித்துக் கொலை செய்துள்ளனர்.   பசுவின்  மரணத்திற்கு காரணம் அந்த இரண்டு பேர்தான் என்று சொல்லி இரண்டு பழங்குடியினரை 20 பேர் கொண்ட கும்பல் இழுத்துவந்து கொடூரமாக தாக்கி இருக்கிறார்கள்.

c

 20 பேரும் சேர்ந்து தாக்கியதால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இரண்டு பழங்குடியினரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறார்கள் .  ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள்.

கொலை  குற்றவாளிகளை போலீஸ் தேடி வருகின்றனர்.  உயிரிழந்தவர்களின் வீடுகளில் போலீசார் சோதனையிட்டபோது, 12 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்துள்ளனர்.

 இந்த சம்பவத்திற்கும் பஜ்ரங் தள அமைப்பினருக்கும் தொடர்பு இருப்பதாக உள்ளூர்வாசிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.  குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏ அர்ஜூன் சிங் ககோடியா,   நெடுஞ் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

 இந்த இரட்டை கொலை வழக்கில் உயர்மட்ட விசாரணை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக அரசை காங்கிரஸ் வலியுறுத்தி வருகிற.து பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் மத்திய பிரதேச மாநிலத்தில் அதிகம் பதிவாகி வருகின்றன என தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான கமல்நாத் தெரிவித்திருக்கிறார்.  நடந்த சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.