மாணவிகள் மட்டுமல்லாது மாணவனையும் விட்டுவைக்காத ஆசிரியர்

 
t

 ஐந்து மாணவ, மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த கணக்கு ஆசிரியருக்கு 79 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.  கேரள மாநிலம் கண்ணூரில் இந்த தீர்ப்பு  பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 கேரள மாநிலத்தில் கண்ணூர் பகுதியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி தனக்கு ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார் கோவிந்தன் நம்பூதிரி(50).  அந்த துவக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த 12 வயதுக்கு கீழ் உள்ள நான்கு சிறுமிகளிடமும் ஒரு சிறுவனிடமும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு இருக்கிறார் . 

yy

கணக்கு பாடத்தில் சந்தேகம் என்று கேட்டு வந்த அவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.  கடந்த 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் இந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன .   கணக்கு ஆசிரியர் கோவிந்தனின் இந்த செயல் சமீபத்தில் தான் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.  

சிறார்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

 இது குறித்த வழக்கு கோழிக்கோட்டில் உள்ள தளபிரம்ப்பா  விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.   ஆசிரியர் கோவிந்தன் நம்பூதிரி மீது கல்வி மையங்களில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது, தொடர்ந்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது,  12 வயதிற்கு கீழ் உள்ள சிறார்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது உள்ளிட்ட சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.  இதில் மூன்று சட்டப் பிரிவுகளின் என்று பதியப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது. 

 இதை எடுத்து மொத்தமாக ஆசிரியருக்கு 79 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.   இந்த வழக்கும் அது குறித்த தீர்ப்பும் கண்ணூர் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.