டாக்டரின் டார்ச்சரால் கடுமையாக பாதிக்கப்பட்ட நர்ஸ்

 
d

டாக்டரின் தொடர் பாலியல் டார்ச்சரால் கடுமையாக பாதிக்கப்பட்ட நர்ஸ் போலீசில் புகார் அளித்தும் போலீசார் கைது நடவடிக்கை எடுக்க தாமதித்து வந்த நிலையில் அந்த டாக்டர் முன் ஜாமின் பெற்று கைது நடவடிக்கையில் இருந்து தப்பியிருக்கிறார்.   இதனால் நர்ஸ் மற்றும் அவரின் பெற்றோர் காவல் துறை மீது கடுமையாக குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.

 ஹைதராபாத்தில் நாராயண கூட காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஹிமாயத் நகரில் மணிஹிந்த் என்கிற மருத்துவமனை இயங்கி வருகிறது.  இந்த மருத்துவமனையில்  டாக்டராக பணிபுரிந்து வருகிறார் சந்திப் பரத்வாஜ்.    இவருக்கு இரவு பணியில் வேலை செய்து வந்த நரஸ் மீது ஈர்ப்பு வந்திருக்கிறது.   அந்த பெண்ணை எப்படியாவது அடைய வேண்டும் என்று அந்த பெண்ணிடம் நெருங்கி பேசி வந்திருக்கிறார்.  அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக சொல்லி இருக்கிறார்.

னு

 இதை நம்பிய அந்த நர்ஸ் டாக்டரிடம் நெருங்கி பழக ஆரம்பித்திருக்கிறார்.   இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு டாக்டர் அந்த நர்சிடம் பாலியல் உறவு வைத்திருக்கிறார்.     அதன் பின்னர் தொடர்ந்து அந்த  பெண்ணுடன் உறவு கொண்டிருக்கிறார்.   தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று அந்த பெண்ணிடம் இயற்கைக்கு மாறான உறவில் ஈடுபட்டு இருக்கிறார்.

 இதனால் அந்த நர்சுக்கு கடும் உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது.   இப்படி தொடர்ந்து டாக்டரின் டார்ச்சரால் கடுமையாக பாதிக்கப்பட்ட அந்த நர்ஸ்,  தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்க,  அதற்கும் தனது அரசியல் செல்வாக்கை வைத்து அந்த நர்சை மிரட்டி இருக்கிறார்.    இதனால் அந்த நர்ஸ் போலீசில் புகார் அளித்திருக்கிறார்.   ஆனால் புகார் கொடுத்து 25 நாட்கள் ஆகியும் டாக்டர் சந்திப் பரத்வாஜ் மீது போலீசார் முறையான நடவடிக்கை எடுக்காததால் அதற்குள் டாக்டர் பரத்வாஜ் நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்றிருக்கிறார.   கைது நடவடிக்கையில் இருந்து தப்பி இருக்கிறார்.   

 நர்சும்,  அவரது பெற்றோரும் போலீசார் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.  புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் சொல்லி வருகின்றனர்.