8 இளம்பெண்கள் துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை

 
gu

 எட்டு இளம் பெண்கள் துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்கள்.  ஆண்கள் நிர்வாணப் படுத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்கள். மியூசிக் ஆல்பத்தின் வீடியோ படப்பிடிப்பில் இந்த சம்பவம்  நடந்துள்ளது.   தென்னாப்பிரிக்காவில் மியூசிக் ஆல்பத்திற்கான வீடியோ படப்பிடிப்பில் நடந்துள்ள இந்த சம்பவம்  அந்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன.

ஜொகனஸ்பெர்க் பகுதியில் உள்ள குருகெர்ஸ்டிராப் நகரத்தில் அந்த மியூசிக் ஆல்பத்திற்கான வீடியோ படப்பிடிப்பு நடந்திருக்கிறது,   இந்த படப்பிடிப்பில் 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட பெண் மாடல்களும் ஆண் மாடல்களும் பங்கேற்று உள்ளார்கள் .  படப்பிடிப்பின் போது துப்பாக்கி ஏந்திய ஒரு கும்பல் திடீரென்று உள்ளே புகுந்து அந்த படப்பிடிப்பில் உள்ள பெண் மாடல்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறது. 

paa

எட்டு இளம் பெண் மாடல்களை  பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். துப்பாக்கி முனையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.  வீடியோ படப்பிடிப்பு குழுவினரை சரமாரியாக தாக்கி அடித்து உதைத்திருக்கிறார்கள்.   படப்பிடிப்பு கருவிகளையும் அடித்து உடைத்து சேதப்படுத்தி உள்ளது அந்த கும்பல். 

 ஆண் மாடல்களை நிர்வாணப்படுத்தி தாக்கியிருக்கிறார்கள்.  அவர்களிடம் இருந்த பணத்தையும் பொருட்களையும் பிடுங்கிக் கொண்டு துப்பாக்கியுடன் பறந்திருக்கிறார்கள்.   இந்த சம்பவம் தென்னாப்பிரிக்காவில் கடுமையாக அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன .

படப்பிடிப்பிற்குள் புகுந்த சுமார் 20க்கும் மேற்பட்டோர் துப்பாக்கி முனையில் அங்கிருந்தோரை கட்டுக்குள் வைத்த  கும்பலை படிக்க தென்னாப்பிரிக்க அரசு தீவிம் காட்டி  வருகிறது.  போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குற்றத்தில் ஈடுபட்ட கும்பல் வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது என்றும் அவர்கள் தென்னாப்பிரிக்காவில் கனிம சுரங்கங்களில் கொல்லையில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரிய வந்திருக்கிறது.   

 தென் ஆப்பிரிக்காவில் சராசரியாக 12 நிமிடத்திற்கு ஒருவர் பாலியல் குற்றத்திற்கு ஆளாக்கப்படுவதாக புள்ளி விபரம் தெரிவித்திருக்கும் நிலையில் இந்த சம்பவம் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன .